English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pronaos
n. பண்டைய கிரேக்கர் கோயிலின் தலைவாயில் முன்கூடம்.
pronate
v. (உட.) கையைக் கவிழ்த்துவை.
pronation
n. (உட.) கையின் கவிழ்நிலை.
pronator
n. (உட.) கையைக் கவிழ்நிலையில் வைப்பதற்கு உதவுந் தசை.
prone
a. முன்கவிவான, முகங்கவிந்து படுத்திருக்கிற,நெடுஞ்சாண்கிடையாகப் படுத்திருக்கிற, நிலம் வகையில் கீழ் நோக்கிய தோற்றமுடைய, செங்குத்தான, தலைகீழான, சார்பு நிலையுடைய, சாதகமான மனச்சாய்வுடைய.
proneur
n. புகழ்ச்சியாளர், ஆர்வப்பாராட்டாளர்.
prong
n. கவர்முள், இருகவர்க்கோல், கவர்முட்கருவி. (வினை.) கவர்க்கோலால் துளை, குத்து, இடி, கிளறு, மண்ணைக்கிளறிப் புரட்டு.
prong-buck, prong-horn, prong-horned antelope
n. மான்போன்ற அசைபோடும் வட அமெரிக்க விலங்குவகை.
pronged
a. கவர்முட்கள் உடைய.
pronominal
a. மறுபெயர் சார்ந்த, மறுபெயரின் இயல்புள்ள.
pronoun
n. மறுபெயர், பெயர்ச்சொல்லினிடத்திற் பயன்படுத்தப்படுஞ் சொல்.
pronounce
v. சாற்று, முறைப்படி கூறு, கழறு, அழுத்தந்திருத்தமாக உரை, அறிவி, தெரிவி, தீர்ப்பு வழங்கு, ஒலிப்பு இயக்கிக்காட்டு, ஒலி, உச்சரி, நவிலு.
pronounceable
a. ஒலிக்கத்தக்க, உச்சரிக்கக்கூடிய.
pronounced
a. வன் திறமான, முனைப்புடைய, தனிப்பண்பினைக் காட்டுகிற, தீர்மானமான.
pronouncement
n. அதிகார அறிவிப்பு.
pronouncing
n. முறையாகக் கூறுதல், கருத்து அறிவித்தல், ஒலித்தல், உச்சரித்தல், (பெ.) உச்சரிப்புக்கு உதவுகிற, ஒலிக்குறிப்பு இன்னதெனக் காட்டுகிற.
prontosil
n. கந்தககங் கலந்த மருந்துச்சரக்கு வகைகளில் ஒன்று.
pronunciamento
n. ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் கிளர்ச்சிக்காரர்கள் விடுக்கும் அறிவிப்பு.
pronunciation
n. நவில்முறை, உச்சரிப்பு, ஒலிப்பு, சொற்களை உச்சரிக்கும் தனிப்பட்டட பாங்கு.
proof
n. கரி, மெய் அறுதிச்சான்று, விளக்கச்சான்று, தௌிவு, சான்று விளக்கம், எண்பிப்பு, சான்றுப்பத்திரம், சான்றுச்சின்னம், செயல்விளக்கம், விளக்கச்செய்முறை, சோதிப்பு, கடுந்தேர்வு, தேர்வுமுறை, வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம், வடிநீர்மங்களின் செறிமானத்தரம், திருத்தத்துக்கான அச்சுப்படி, பார்வைப்படி, (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு, செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு, ஆய்குழல், புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள், (கண.) முடிவுச் சோதனை, (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய, ஊடுருவப்பட முடியாத, தாக்குதலால் கேட்டையாத, தடைகாப்பான, தூற்றுக்கு இடங்கொடாத, (வினை.) தடைகாப்புச் செய், ஊடுருவ முடியாததாக்கு, துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.