English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
prolicide
n. பிள்ளைக்கொலை, சிசுக்கொலை.
proliferate
v. உயிர்மம் பெருக்கு, விரைந்து பெருக்கு.
proliferation
n. உயிர்மப் பெருக்க வளர்ச்சி, இனப்பெருக்க அடியமைவிலிருந்து புதுக்குருத்துக்கள் உண்டாதல், புதிய உறுப்புக்கள் அடுத்தடுத்து உண்டாதல், குருத்துக்கள் புதிய செடிகளாக வளரும் வளர்ச்சி, பொதுநிலை இயல்பு மீறிய அல்லது பொதுநில எண்கடந்த உறுப்புக்கள் உண்டாதல், பருவவளர்ச்சி மூலமாக உண்டாகும் புத்தமைப்பு.
proliferous
a. (தாவ.) இலையிலிருந்து இலைமொட்டு உண்டாக்குகிற, பூவிலிருந்து பூமொட்டு தோற்றுவிக்கிற, மொட்டுக்களிலிருந்து புதிய தலைமுறை உண்டுபண்ணுகிற, (வில.) தாய்விலங்கினின்றும் குமிழ்போன்ற உறுப்பு வளர்ச்சியிலிருந்து இனம் பெருக்குகின்ற, (மரு.) நோய்வகையில் உயிர்மப்பெருக்த்தின் மூலமாகப் பரவுகிற.
prolific
a. கால்வழிப் பெருக்கமுள்ள, இனப்பெருக்க வனமிக்க, ஏராளமான, விளைவு வளமிக்க.
proligerous
a. குழந்தை பெறுகிற, ஈனுகிற, பிறப்புச் சார்ந்த.
prolix
a. மிகு சொற்புணர்த்த, சலிப்பூட்டுகிற அளவுக்குச் சொற்பொருக்கமுள்ள, நெடுநீளமான.
prolixity
n. நீட்சி, சொல்மிகை.
prolocutor
n. இங்கிலாந்தின் மாகாணத் திருச்சபைக் குருமார் மன்றத்தின் கீழவைத் தலைவர்.
prologize
v. பாயிரம் எழுது, முன்னுரையாகக் கூறு.
prologue
n. முகப்புறுப்பு, பாயிரம், அறிமுகப்பகுதி, பீடிகை, அறிமுகம் செய்யப்பயன்படுகிற செயல், முன் குறிப்பு நிகழ்ச்சி, (வினை.) முகவுரை கூறி அறிமுகப்படுத்து, முகவுரை எழுதிச் சேர்.
prolong
v. நீட்டு, அளபெடுக்கச்செய், அசை ஒலிப்பினை நீடிக்கவை, காலங்கடத்து, நீடி, அளபெடு, கால நீட்டிப்புறு, தொடர்ந்து நீள்வுறு.
prolongation
n. நீட்டம், நீட்டிப்பு, தொடர்ச்சியாகச் சேர்க்கப்பட்ட ஒன்று, நீட்டிய பகுதி, தொடர்ச்சி.
prolusion
n. வெள்ளோட்டம், முன் கட்டுரை.
prom
n. (பே-வ) உலாவியல்இசைவிருந்துக்குழு, கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசைவிருந்தமைப்பு.
promenade
n. உலா, உலாவுமேடை, பவணிவீதி, (வினை.) உலாவு பவனி வா.
promerops
n. தென்னாப்பிரிக்க பறவையினம்.
Promethean
n. தீக்குச்சுக்குப் பதிலாக முன்பு வழங்கப் பட்ட கந்தகக்காடியும் எரியகக் கலவையும் அடங்கிய குழல்வகை, (பெ.) கிரேக்க புராணமரபில் தேவர் தலைவனை எதிர்த்து நின்று போராடி அருந்துயர்க்காளாகி மனித உலகுக்கு நெருப்ப கொணர்ந்ததாகக் கூறப்படும் தேவருக்கு முற்பட்ட அசுரவீரனான புரோமித்தியஸ் போன்ற, புரோமித்தியஸ் என்ற வீரனுக்குரிய.
prominenece, prominency
n. மேம்பாடு, மேற்புடைப்பு, உயர்ச்சி, மேடு, முகடு, முனைத்த முக்கியத்துவம், முதன்மைநிலை, தலைமைநிலை.
prominent
a. காண்புக்கடுத்த, மேற்புடைப்பான, எடுப்பான தோற்றமுடைய, விஞ்சிய, முனைத்த, மேடிட்ட, முகடான, முதன்மை வாய்ந்த, முக்கியத்துவம் வாய்ந்த, சிறப்புமிக்க.