English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
progressionist, progresist
n. முன்னேற்றவாதி, அரசியல் சமுதாய முற்போக்குக் கொள்கைகளுக்கு ஆதரவு காட்டுபவர், நாகரிக முற்போக்குக் கோட்பாட்டாளர், உலகவாழ்வு படிப்படியாக முன்னேறி வருகிறதென்னுங் கொள்கையுடையவர்.
progressive
n. முற்போக்காளர், அரசயல் சமுதாயத்துறைகளில் முன்னேற்ற ஆதரவளர், (பெ.) முன்னேறுகிற, படிப்படியாக முன்னோக்கிச் செல்கிற, படிப்படியான, சமுதாய நிலை-பண்பு-திறமை முதலியவற்றில் படிப்படியாக வளர்ந்து வருகிற, நோய்வகையில் முற்றிக்கொண்டே செல்கிற, சீர் திருத்தத்தை ஆதரிக்கிற.
prohibit
v. தடை செய், செயலைத்தடு, தடுத்தாணையிடு.
prohibition
n. தடைசெய்தல், செயலைத்தடுத்தல், தடையுத்தரவு, மதுவிலக்கு, (சட்.) வழக்கு விசாரணைத் தடையுத்தரவு.
prohibitive
a. தடுக்கிற, தடைசெய்கிற.
prohibitory
a. விலக்குகிற, தடுக்கிற.
project
-1 n. திட்டம், செயல்முறை ஏற்பாடு.
projectile
n. ஏவுகணை, உந்திவீசப்படும் எறிபடை, (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க.
projection
n. எறிவு, வீச்சு, உமிழ்வு, புறத்தெறிவு, உலோகமாற்றுச் சித்து, திட்ட ஏற்பாடு, பிதுக்கம், முந்துறுகை, நீட்டிக்கொண்டிருக்கை, (வடி.) தொடர் இணைவுரு, வரை உருவின் சரியிணை எறிவுப்படிவம், (வடி.) பிறதள எறிவுரு, தளத்திலிருந்து தளமீது படிவிக்கப்படும் எறிவுப்படிவம், உருவமைவு, கருத்துரு, திரைமீதுள்ள ஒளிநிழல் எறிவுரு.
projective
a. கருத்துக்குப் புறவுருக்கொடுக்கிற, எறியப்பட்ட, எறிவுப்படிவ இயல்புடைய, எறிவினால் படிவிக்கப்பட்ட, எறிவினால் பண்புமாறாத, உந்துமுகப்புடைய.
projector
n. திட்ட இயக்குநர், ஆதாயவேட்டை நிறுவனங்களை அமைப்பவர், ஒளி எறிவுக் கருவி அமைவு, திரைப்பட ஒளியுருப்படிவுக்கருவி, எறிவுப்படிவக்கோடு.
prolap,sus
(மரு.) உறுப்புப்பெயர்வு, கருப்பை அல்லது மலக்குடல் இடம்பெயர்வுறல்.
prolapse
n. (மரு.) கருப்பை நெகிழ்ச்சி, (மரு.) மலக்குடல் இடப்பெயர்வு, (வினை.) உடலுறுப்பு வகையில் இடர்பெயர்வுறு.
prolate
a. (வடி.) கோளவுரு வகையில் துருவ அச்சு நீட்டிப்பு உடைய, அகலத்தில் மிகை வளர்ச்சியுடைய, மிகுபரவலாயுள்ள, (இலக்.) பயனிலைப்பொருளை முடிப்பதற்குப் பயன்படுகிற, பயனிலைமானம் விரிக்கிற.
prolegomenon
n. பாயிரம், பீடிகை.
prolepsis
n. வருவது முன்குறிந்த நிலை, (இலக்.) வரும்பொருள் முன்குறித்த பெயரடை வழக்கு.
proletaire
n. ஊழிய வகுப்பினர், சமுதாயத்தின் கடைவகுப்பு மக்களில் ஒருவர், (பெ.) சமுதாயத்தின் கடைவகுப்புச் சார்ந்த.
proletarianism
n. கடைவகுப்பு மக்கள் நிலை.
proletariat, proletariate
n. சமுதாயத்தின் கடைவகுப்பினர் குழு, பொருளாதார வகையில் தொழிலாளர் வகுப்பு, பட்டாளி மக்கள் தொகுதி.
proletary
a. சமுதாயத்தில் கடைவகுப்பு மக்கள் சார்ந்த.