English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Panama,Panama hat
n. வைக்கோல் போன்ற பொருளாற் செய்யப்படும் நேர்த்தியான நெகிழ்வுடைய தொப்பி வகை.
panatrope
n. ஒளிபெருக்கிமூலம் இசைத்தட்டுக்களின் படியெடுக்கும் மனி அமைவு.
pancake
n. பணியார வகை, தோசை, முட்டை-மாவு-சர்க்கரை-பால் முதலியன கலந்து தட்டில் வார்த்தெடுக்கப்படும் மெல்லிய அடைவகை, விமானம் தட்டைச் சிறகுகளோடு கீழிறங்குதல்.
panchayat
n. பஞ்சாயத்து, ஐம்பெருங்குழு.
panchromatic
a. (நி.ப.) எல்லா நிறங்களையும் ஒருபடித்தாகக் கூருணர்கிற.
pancratic
a. மல்லர் குத்துச்சண்டை, சார்ந்த, மூக்குக்கண்ணாடிவில்லை வகையில் பல பாகைகளிற் பருமைப்படுத்தத்தக்க.
pancratium
n. மல்லர் குத்துச்சண்டை.
pancreas
n. கணையம், செரிமானத்துக்கேற்ற நீர்சுரக்கும் இரைப்பைக்கு அருகிலுள்ள சுரப்பி.
pancreatic
a. கணையஞ் சார்ந்த.
pancreatin
n. கணைய நீரின் செயற்படு கூறுகளில் ஒன்று, விலங்குகளின் கணையங்களிலிருந்து வடித்திறக்கப்படுஞ் செரிமான நீர்மம்.
panda
n. செங்கரடிப் பூ இமயமலைப் பகுதிசார்ந்த கரடியின் விலங்குவகை.
pandects
n.pl. பண்டை ரோமப் பேரரசர், ஜஸ்டினியன் கட்டளைப்படி தொகுக்கப்பட்ட 50 சுவடிகளில் அடங்கிய ரோமப் பொதுநலச்சட்டம், சட்டங்களில் முழுத்தொகுதி.
pandemian
a. இழிதகைமையான, உடலின் பஞ்சார்ந்த.
pandemic
n. பெரும்பரப்புத் தொத்துநோய், (பெ.) பெரும்பரவலான.
pandemonium
n. பேய்க்கூடம், ஒழுங்கற்ற வன்செயலம் பேய்க்கூச்சலும் நிகழுமிடம், பெருங்குழப்பம்.
pander
n. பரத்தமைத் தரகர், தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்பவர், (வினை.) இழிந்தஉணர்ச்சிகளுக்கு இடந்தேடிக்கொடு, தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்.
pandiculation
n. காலை நீட்டிக்கொண்ட கொட்டாவிவிடுழ்ல்.
pandit
n. அறிஞர், மொழிப்புலவர், இந்துசமய சாத்திரவல்லுநர், இந்திய சட்ட நிபுணர், விஞ்ஞானப்புலவர்.
pandora
n. நரப்பிசைக்கருவி வகை.
Pandorasbox
n. நல்வாழ்வு சாபப்பெட்டி, கிரேக்கப் பழங்கதை மரபில் மனித இனத்தின் துன்பங்களையும் துயரங்களையும் உள்ளடக்கித் திறந்தபோது சிதறிவட்டதாகக் கருதப்படும் பெட்டி.