English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pandour
n. முற்கால ஆஸ்திரிய படைத்துறைப்பணியிலிருந்த காலாட்படையினன், கொள்ளைக்காரன்.
Pandrean, Pandean
கிரேக்க நாட்டுப்புறத் தெய்வத்தினைச் சார்ந்த.
pane
n. பலகணிக் கண்ணாடிச்சில்லு, பலகணிச் சட்டத்தின் நாற்கட்டமான கண்ணாடிப்பாளம்,(வினை.) பலநிறப் பட்டைத்துண்டுகளை இணைத்து உடுப்பு முதலியன ஆக்கு.
panegyric
n. புகழுரை, (பெ.) புகழ்சாற்றுகிற, புகழ்பாடுகிற, போற்றுதல் மயமான.
panegyrist
n. புகழ்பாடுபவர், வைதாளிகர், மங்கலம் பாடுவோர்.
panegyrize
v. புகழ்ந்து பேசு, பாராட்டியெழுது.
panel
n. சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி, சேணவகை, தாள் நறுக்கு, முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல், முறைகாண் ஆயம், சிறு பெயர்ப்பட்டியல், வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி, காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல், பொட்டிப்பு, கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு, நீள்சதுரத்துண்டு, மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு, வேலிப்பிரிவு, அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம், அரங்கம், பிரிவு, கூறு, (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு, சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை, வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
pang
n. கடும்வேதனை, இனைவு, சுரீரென்ற நோவு.
pangamy
n. திடீர்ப்புணர்ச்சி, திடீர்த்திருமணம்
pangolin
n. எறும்புண்ணும் விலங்குவகை.
panic
-1 n. இத்தாலிய தினைவகையினை உள்ளிட்ட புல்வகைகளின் பேரினம்.
panic-monger
n. திகில் பரப்புபஹ்ர், பீதியுண்டாக்குபவர்.
panicky
a. திகில் விளைக்கிற, கிலிகொண்ட.
panicle
n. (தாவ.) பல்கவர் மலர்க்கொத்து, கலப்பு மஞ்சரி.
panification
n. பொங்கப்பம் செய்தல், ரொட்டிப் புனைவு.
panIslam
n. இஸ்லாமிய உலகத்தின் கூட்டு, இஸ்லாமிய உலகின் கூட்டமையுக்கள இயக்கம், இஸ்லாமிய உலகின் கூட்டிணைவார்வம்.
panjandrum
n. கற்பனை வீரத்திருமகன்.
panlogism
n. இயலுலகு மூலதத்துவத்தின் வெளிப்பாடே என்ற கோட்பாடு.
panlogistic
a. ஹெகல் என்னும் செர்மன் அறிஞர் கோட்பாட்டின்படி பகுத்தறிவுக்கொத்தது மட்டுமே உண்மையானதெனக் கருதுகிற.
pannage
n. பன்றி பொறுக்கலுண்டி, நாடுகளிற் பன்றி மேய்ப்புரிமை