English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
near
a. அணுக்கமான, நெருங்கிய உறவுடைய, நெருக்கமான, நெருங்கிய பழக்கமுடைய, இப்பாலான, நெருங்கிய தொலைவிலுள்ள, அருகிலுள்ள, கால அணிமையுடைய, குறுகிய தொலைவுடைய, நேர் குறுக்கான, இடது பக்கமான, நெருங்கிய ஒப்புமையுடைய, அணுக்க ஏற்றத் தாழ்வான, நுணுகி நோக்க வேண்டிய, நுட்பமான, இடுங்கிய, மயிரிஐ தப்பிய, (வினையடை.) அருகில், கால அணிமையில், ஏறத்தாழ, கிட்டத்தட்ட முனைந்தொருங்கி, அருகே, நெருங்கி, தொலை குறைவாக, அடுத்து, பக்கத்தில், நுணுக்கமாக, கால அணித்தாக, (வினையடை.) அணுகு, நெருங்கு.
near-sighted
a. அணிமைப் பார்வையுள்ள, குறுக்கப் பார்வையுள்ள, வருவது உணராத.
nearctic
a. (வில.) வட அமெரிக்காவின் குளிர் மட்டு வெப்ப மண்டலங்களைச் சார்ந்த.
nearly
adv. கிட்டத்தட்ட, ஏறத்தாழ, நுணுகி, மிக அணுக்கமாக, நெருக்கமாக.
neat
-2 a. நேர்த்தியான, செப்பமிக்க தோற்றமுடைய, செம்மையான, ஓழுங்கமைப்புடைய, நேரிய, அமைப்பௌிமை வாய்ந்த, மொழிநடை-சொற்கள் வகையில் திட்பம் வாய்ந்த, திட்ப நுட்ப இயைந்த, செயல் திறமிக்க, எளிமை வண்ணஞ் சான்ற, முறைமை வாய்ந்த, துப்புரவான, அப்பழுக்கற்ற, மது வகையில் நீர் கலவாத.
neat-handed
a. கைத்திறம் வாய்ந்த.
neat-herd
n. ஆனாயர், ஆனிரை மேய்ப்பவர், இடையர்.
neat-house
n. மாட்டுத்தொழுவம், கால்நடைப்பட்டி.
neath
prep. கீழே அடியில்.
neatly
adv. துப்புரவாக, ஒழுங்கௌிமை, எளிமைத்திறம்.
neatness
n. துப்புரவு, ஒழுங்கௌிமை, எளிமைத்திறம்.
neats-foot
n. மாட்டுக் காலடி இறைச்சிக்கறி.
neats-leather
n. மாட்டுத் தோல்.
neats-tongue
n. மாட்டுநா இறைச்சிக்கறி.
neb
n. அலகு, மூக்கு, மூஞ்சி, முகறை நுனி, மூக்குப் போன்ற கூம்பு முனை, நுனி.
nebula
n. விழி வெண்கோளத்திற் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி, (வான்.) ஒண்முகிற் படலம், ஒண்மீன் படலம், ஒளி ஆவி போலத் தோன்றும் நீணெடுந் தொலை விண்மீன் குழாம்.
nebular
a. ஒண்மீன் படலஞ் சார்ந்த.
nebulium
n. வண்ணப்பட்டையின் பச்சைநிறப் பகுதியில் உள்ள ஒளிமிக்க வரிகளின் காரணமாக முன்னால் கருதப்பட்ட வளி மூலப் பொருள்.
nebulous
a. (வான்.) ஒண்மீன் படலத்துக்குரிய, ஒண்மீன்படலம் போன்ற, முகில் போன்ற, மஞ்சு படர்ந்தாற் போன்ற, மங்கலான, தௌிவற்ற, தௌிவான உருவற்ற, கலங்கலான, குழம்பிய.
necessarianism
n. மன்னியல் வாதம், விருப்பாற்றல் புற ஆற்றல்களால் இயக்கப்படுவதேயன்றித் தன்னியலாற்றலாலன்று என்று கொள்ளும் கோட்பாடு.