English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
necessaries
n.pl. இன்றியமையாத் தேவைப்பொருள்கள், உயிர்நிலைத் தேவைகள்.
necessarily
adv. தவிர்க்க முடியாதபடி, கட்டாயமாக, இன்றியமையா நிலையில்.
necessary
n. கட்டாயத் தேவை, ஒதுக்கிடம், (பே-வ.)பணம், (பெ.) இன்றியமையாத, அவசியமான, கட்டயாத் தேவையான, தீராது வேண்டப்படுகிற, நடந்துதீர வேண்டிய, ஆகவேண்டிய, தவிர்க்க முடியாத, விலக்க முடியாத, விருப்புரிமைக்கு இடமற்ற, கட்டாயமாகச் சுமத்தப்பட்ட.
necessitarian
n. மன்னியல்வாதி, புறநிலைக் காரணங்களன்றிச் செயற்காரணங்களாகத் தன்னியலான விருப்பாற்றல் எதுவும் கிடையாதென்ற கோட்பாட்டினை உடையவர், (பெ.) மன்னியல் வாதமான.
necessitate
v. இன்றியமையாததாக்கு, தவிர்க்க முடியா படி செய், அவசியமாக்கு, கட்டாயப்படுத்து.
necessities
n.pl. வறுமை, நல்குரவு, கடுந்துயர், துன்பம், நெருக்கடித் தேவைநிலை.
necessitous
a. வறுமையான, நல்கூர்ந்த.
necessity
n. இன்றியமையாத, தவிர்க்கமுடியாமை, கட்டாய நிலை, சூழ்நிலைக் கட்டுப்பாடு, விலக்க முடியா நிகழ்வு, கட்டாய விளைவு, தவிர்க்க முடியாத செய்தி.
neck
-1 n. கழுத்து, விலங்கின் கழுத்திறைச்சி, குப்பியின் குறுகிய கூறு, வழி-வாய்க்கால் முதலியவற்றின் ஒடுங்கிய பகுதி, நில இடுக்கு, நில இணைப்பு, கணவாய், இடை இணைப்புப் பகுதி, (க.க.) தூணின் தலைப்படுத்த கீழ்ப்பகுதி, (வினை.) கட்டித் தழுவு, கழுத்தைக் கட்டு.
neck-verse
n. தலை காக்கும் பாடல், திருச்சபைக் காப்புரிமையுடையவர் கொலைத் தண்டணையிலிருந்து தவிர்ப்புப் பெற வாசிக்கப்படும் விவிலியப் பாடல் வாசகம்.
neckband
n. கழுத்துப் பட்டி.
neckcloth
n. கழுத்துக்குட்டை, ஆடவர் கழுத்தைச் சுற்றி அணியும் துகிற்பட்டி.
neckerchief
n. கழுத்தைச் சுற்றி அணியுங் குட்டை.
necking
n. (க-க.) எருத்தம், தூணின் தலைப்பகுதிக்கும் நடுத்தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி.
necklace
n. ஆரம், கழுத்து மாலை, பதக்கம், கண்டசரம்.
necklet
n. கழுத்து அணி, கம்பளிப் பட்டிகை.
necktie
n. கழுத்துக்கச்சு, கழுத்துப் பட்டையைச் சுற்றி அணியப்படும் சுருக்கு.
necrobiosis
n. உடலின் தசை அழுகல்.
necrogenic
a. இறந்த உடலினின்று தோன்றிய.