English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
nuncupate
v. விருப்ப ஆவணத்தை வாய்மொழியாகக் கூறு.
nunnation
n. வேற்றுமையில் பெயாச் சொல்லிறுதியில் நகர ஒலி இணைவு.
nuns cloth
n. மெல்லிய கம்பளித் துணி வகை.
nuns thread
n. நேர்த்தியுடைய வெண்மையான தையல் நூல்.
nuns veiling
n. மெல்லிய துகில் வகை.
nuphar
n. மஞ்சற்நிற நீராம்பல் வகை மலர்.
nuptial
a. திருமணஞ்சார்ந்த, திருமணம் பற்றிய.
nuptials
n.pl. திருமணம், திருமண உறவு.
nurse
-1 n. தாதி, வளர்ப்புத்தாய், ஊட்டுதாய், குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள், நோயாளிகளைப் பேணிக் காப்பவர், பாலூட்டி வளர்ப்பு, பேணிக் காப்பு, இனத்தாய்ச்சி, தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம், கன்னித்தாய்ச்சி, இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை, காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம், பண்பின் வளர்ப்பு நிலம், (வினை.) ஊட்டுதாயாய் உதவு, பாலூட்டி வளர், பேணி வளர், தாதியாகச் செயலாற்று, நோயாளிகளைக் கவனித்துப் பேணு, நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய், செடிகொடி பயிர்களைப் பேணு, தோட்டம் பாதுகாத்து வளர், கலை முதலியவற்றைப் பேணி ஆதரி, பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய், தளராமல் பாதுகா, பரிவோடு கவனி, கவலை கேடு வராமல் பேணு, குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு, தழுவிக்கொஞ்சி விளையாடு, முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு, காலைத் தடிவிப்படி, உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு, கணப்பருகில் அணைவாக அமர், வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு, மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை, முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து, பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
nurse-child
n. வளர்ப்பு பிள்ளை.
nurse-frog
n. குஞ்சு பொரிக்கும் வரையில் முட்டைகளைத் தந்தையே சுமந்து திரியும் மரபுடைய தவளை வகை.
nurseling
n. குழந்தை, செவிலியால் பேணி வளர்க்கப்படும் குழவி, வளர்க்கப்பட்டவர், பேணி உருவாகக்கப்பட்டவர், வளர்க்கப்பட்டது, பேணி உருவாக்கப்பட்டது.
nursery
n. குழந்தை வளர்ப்பரங்கம், குழந்தையர் காப்பறை, நாற்றுப்பண்ணை, நாற்றங்கால், பண்பின் வளர்ப்பிடம், பண்புடையர் தாயகம்.
Nursery school
மழலையர் பள்ளி
nursing
n. வளர்ப்பு, சீராட்டு, பேணுகை, (பெ.) வளர்க்கிற, பேணிக் காக்கிற, வளர்ப்புக்குரிய.
nurture
n. பேணி வளர்ப்பு, பயிற்றுவிப்பு, கவனிப்பு, அன்புக் கண்காணிப்பு, ஊட்டம், ஊட்டி வளர்ப்பு, (வினை.) பேணி வளர், ஊட்டி வளர், பேணிப் பயிற்றுவி.
nut
n. கொட்டை, கொட்டைவகை, உட்பருப்புடைய ஒற்றை விதை, தலை, கடுமிண்டன், கடுநிரடு, இளமை முறுக்குடையவன், நூற்புக்கதிரின் பல்வட்டு, திருகு மரை, சுரையாணி இறுக்கும் புரி வட்டு, இசைக்கருவியின் மீட்டுவில் நாணிறுக்கி, பிரடை, வில்யாழின் திவவுக்கட்டை, நிலக்கரிக்கலம, (வினை.) கொட்டைகளைச் சேகரி, கொட்டைகளைத் தேடிப் பொறுக்கு.
nut-brown
a. செந்தவிட்டு நிறமான.