English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
nudist
n. அற்றம் மறைக்க வேண்டாதவர்.
nugae
n.pl. அற்பமானவை, பயனற்ற புலமை நுணுக்கங்கள், ஆதாயமற்ற சிறுதிறச் செய்திகள்.
nugatory
a. அற்பமான, பயனற்ற, ஆதாயமற்ற, சட்டப்படி செல்லாத, நடைமுறையிலில்லாத, இயங்காத.
nuggar
n. நைல் ஆற்றுப் பாங்கரில் வழங்கும் வாயகன்ற படகு வகை.
nugget
n. சீர் செய்யப்படாத தங்கக்கட்டி.
nuisance
n. தொல்லை, தொந்தரவு, நச்சரிப்பாளர், தொல்லை தருபவர், சள்ளை, தொந்தரவூட்டுவது, தொந்தரவு தரும் செயல், வேண்டா வெறுப்புக்குரிய செய்தி, (சட்.) மன்பதைத் தொல்லை, சமுதாயத்துக்குக் கேடான செயல், (சட்.) பிறருக்குக் கேடுபயப்பது.
null
n. குழூஉக்குறி உட்கொண்ட பயனில் எழுத்து, (பெ.) செல்லும்படியாகாத, மதிப்பில்லாத, கட்டுப்படுத்தாத, பொருளற்ற, வேறு நிலையான, இல்லா நிலைப்பட்ட.
nulla bona
n. கடனுக்கு ஈடாகக் கடனாளியிடம் சொத்து எதுவுமில்லையென மாநகர் மணியக்காரர் கொடுக்கும் அறிக்கை.
nullah
n. கால்வாய், நீரோடை, ஆழ்பள்ள நீரோடை.
nullify
v. பயனற்றுப் போகச்செய், செல்லுபடியற்றதாக்கு, தள்ளுபடி செய், முனைப்பழி, ஆற்றல்கெடு.
nullipore
n. கடல்வாழ் தாவரவகை.
nullity
n. செல்லுபடியாகாத நிலை, பயனற்ற தன்மை, வெறுமையான தன்மை, செல்லுபடியாகாத சட்டம், செல்லா ஆவணம், இல்லாத ஒன்று, மிகச் சிறுதிறம்.
numb
a. உணர்ச்சியற்ற, மரமரத்த, இயக்க ஆற்றலற்ற, (வினை.) உணர்ச்சி அறச்செய், மரத்துப்போகச் செய், உணர்வு மழுங்கச்செய்.
numb-fish
n. மின்னேற்றுமீன், இரையைத் தன்பாலுள்ள மின்னாற்றலினால் மரத்துப்போகச் செய்து கொன்றுதின்னும் மீன்வகை.
numberless
a. எண்ணிக்கையற்ற, கணக்கிலடங்காத.
numbers
n.pl. சீர்த்தொகுதி செய்யுள்நடை, சுரத்தொகுதி இசைநடை, பெருந்தொகை, எண்ணிக்கை வலிமை.
numbles
n.pl. மானின் குடற்கொடி.
numeral
n. எண்குறி, இலக்கம், எண்ணுப்பெயர், எண்குறித்த இலக்கத் தொகுதி, எண்குறித்த தொடர், எண்குறித்த சொல், (பெ.) எண்ணைக் குறிக்கிற, எண் சார்ந்த.