English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
nowel
int. நாவலோஸ் கிறித்துமஸ் பண்டிகை மகிழ்ச்சி ஆரவாரக் கூக்குரல்.
nowhence,nowhither
எந்த இடத்திலும் இல்லாமல், எந்த இடத்திற்கும் இல்லாமல்.
nowhere
adv. எவ்விடத்திலுமின்றி, எங்குமின்றி, ஓரிடத்துமின்றி.
noxious
a. தீமையான, கெடுதி விளைவிக்கிற, நச்சுத்தன்மை வாய்ந்த.
noyade
n. நீரில் மூழ்கவைத்துக் கொலை செய்தல், 1ஹ்ஹீ4-இல் நடைபெற்ற மூழ்கடிப்புப் படுகொலைத் தொகுதி.
noyau
n. கொட்டைப்பருப்புக்களிட்டு நறுமணமும் தீஞ்சுவையுமூட்டப்பட்ட தேறல்வகை.
nozzle
n. குழாய் முனை, தூம்புவாய், நீள்குழாய்க் கூம்பலகு.
nuance
n. நுட்ப வேறுபாடு, வண்ணச்சாயல் வகையில் நுண்ணியத்திரிபு, கருத்துவகையில் நயநுட்ப வேற்றுமை சொற்பொருள் வகையில் நுழைநய வேறுபாடு, உணர்ச்சி வகையில் நுணக்கத் திரிபுநயம்.
nub
n. நிலக்கரிக்கட்டி, சுருக்கம், கருப்பொருட்குறிப்பு.
nubile
a. மகளிர் வகையில் மணமாகத்தக்க பருவமடைந்த.
nuchal
a. பிடர்பற்றிய, கழுத்தின் பின்புறத்துக்குரிய.
nuciferous
a. கொட்டை பயக்கிற.
nucivorous
a. கொட்டை அருந்துகிற.
nucleal,nuclear,nucleary
கருவுக்குரிய, கருமுனை சார்ந்த, கரு மைய இயல்புடைய.
nucleole
n. கருவிற்குள் கரு, உள்ளணுவுள்ளிருக்கும் உள்ளணு.
nucleusn
n. மையக்கரு, வளர்பிழம்பின் கருமூலம், கொட்டை, மையக் கொளு, தீக்கல்லின் உடையா மையச் செறிகணு, (வான்.) வால் வெள்ளியின் தலைப்பிலுள்ள செறிவொளிப்பிழம்பு, (உயி.) ஊன்மத்தின் நள்ளுயிர்மம், (வேதி.) சேர்மத் தொடர் உருவாகும்படி பிற அணுக்களுடன் இணைய வல்ல நிலவர நள்ளணுத்டதிரள், (இய.) கருவுள், சுழலும், மின் மங்களுக்கு ஈடான நேர்மின் செறிவுடைய கரு மையம்.
nuctitropic
a. (தாவ.) இரவில் ஒருதிசையில் திரும்புகிற.
nude
n. ஆடையற்ற உருவச்சிலை, வெறுமேனி உருவ ஓவியம், (பெ.) அம்மணமான, ஆடையற்ற, துணியால் மூடப்பெறாத.
nudge
n. முழங்கை இடிப்பு, தட்டு, தள்ளு, (வினை.) முழங்கையால் இடி, இடித்துக் கவனத்தைத் திருப்பு.
nudism
n. முண்டு கட்டாக் கோட்பாடு.