English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Moloch
n. குழந்தைகள் பலியிடப்பெற்ற செமிடிக் கடவுள் சிலை, முட்களையுடைய ஆஸ்திரேலிய பல்லியின விலங்குவகை.
molossus
n. மூன்று நெடிலசைகள் கொண்ட செய்யுளடி.
molten
a. உருக்கி வார்க்கப்பட்ட.
moly
n. வியத்தக்க ஆற்றல் வாய்ந்ததாகக் கருத்ப்படும் கற்பனைப்பூண்டு, வெள்ளைப் பூண்டினச் செடிவகை.
molybdenum
n. முறிவெள்ளி, தகர்வியல்புடைய வெள்ளி நிறம் வாய்ந்த உலோக வகை.
moment
n. கணம், விநாடி, சிறப்பு, (இயந்) நெம்புதிறன்.
momentary
a. கணநேரமே உள்ள, சுருங்கிய வாழ்வுள்ள, நிலையில்லாத.
momently
adv. கணத்துக்குக் கணமாக, கணந்தோறும், கணநேரத்துக்கு.
momentum
n. (இயந்) இயங்குவிசை, மோதாற்றல், இயக்க ந்துவிசை.
momentuous
a. பெருஞ் சிறப்பு வாய்ந்த, பெருவிளைவுகளை உண்டாக்கவல்ல.
Momus
n. கிரேக்க புராண மரபில் ஏளனத்தெய்வம், குற்றங்காண்பவர்.
monacal, monachal
துறவிமடஞ் சார்ந்த.
monad
n. ஒருமை, ஒருமைநிலை, (மெய்) முடிநிலை ஒருமை, (உயி) கற்பனை மூலஉயிரணு,. (வேதி) ஓரிணை திறத்தனிமம், நீரகத்தின் ஓரணுவுடன் இணையும் ஆற்றலுடைய தனம வகை.
monadelphous
a. (தாவ) ஒரே மலரிழையுடைய.
monandrous
a. (தாவ) ஒரே மலரிழையுடைய.
monandry
n. ஓருசமயத்தில் ஒரே கணவரை மேற்கொள்ளும் வழக்கம்.
monarch
n. ஆளுநர், முடிமன்னர், எல்லார்க்கும் மேம்பட்ட ஆட்சியாளர்,. அரசன், அரசி, பேரரசன், பேரரசி, சிவப்பும் கருமையுங்கலந்த நிறமுடைய பெரிய வண்ணத்துப்பூச்சிவகை.
monarchal, monarchic, monarchical
முடியரசு சார்ந்த, முடிமன்னருக்குரிய.
monarchism,
முடியரசுக் கோட்டபாடு, முடியரசுப்பற்று.