English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
mods
n. முறை, செயல்வகை, வழக்கம, வழக்காற்றிலுள்ள பாணி, காலப்பாங்கு, (இசை) சுரவரிசைத்திட்டம், (அள) கருத்து வாசகத்தின் பயனிலைப்பொருள் எல்லை வரையறையுடைய தன்மை.
modulate
v. ஒழுங்குபடுத்து, சரிப்படுத்து, இசைவி, குரலை ஏற்றியிறக்கிப் பேசு, (இசை) சுரபேதம் பண்ணு, இசைத்தாழ் மாற்று, வானொலியில்அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமை.
modulation
n. (இசை) தான நிலை, வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படும் இசைக்கூறுபாடு, வானொலி அலையகல அதிர்வு மாற்றமைப்பு.
modulator
n. ஒழுங்குபடுத்துபவர், சரிப்படுத்தும் பொருள், வானொலி வகையில் தானநிலையை உண்டுபண்ணுவதற்கான பொறியமைவு, இசைத்துறையில் பயன்படுத்தப்படும் விளக்கக் குறியீட்டுப்படம்.
module
n. அளப்பதற்கான அலகு, (க-க) சிற்ப அளவு, தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்பதற்கான நீட்டலளவை அலகு.
modulus
n. நிலைதகவு, மடக்கைகளின் வகைமாற்றத்துகான நிலையான வாய்ப்பாடு, உறுதகவு, ஆற்றலுக்கும் அதன் உடல்சார்ந்த விளைவுக்கும் இடையேயுள்ள நிலையான தொடர்பளவு.
modus
n. முறை, பதின்கூற்றுவரிக் கீடாகச் செலுத்தப்படும் தொகை.
mofette
n. நச்சுவளி வெளிப்படுத்தும் நிலவெடிப்பு, நில நச்சுவளி வெளிப்பாடு.
mofussil
n. நாட்டுப்புறம், தலைநகரத்தினின்றும் தொலைவான நாட்டுப்பகுதி.
Mogul
n. மங்கோலியர், (பெயரடை) மங்கோலிய.
mohair
n. அங்கோர ஆட்டின் மயிர், மங்கோரா ஆட்டுக் கம்பளி நுல், அங்கோரா ஆட்டுமயிரைக்கொண்டு செய்யப்படும் நேர்த்தியான துணி வகை.
Mohammedan
n. இஸ்ஸாமியர், (பெயரடை) இஸ்லாமிய.
Mohammedanism
n. இஸ்லாம் சமயம்.
Moharram, Muharram
முகம்மதிய ஆண்டின் முதல் மாதம், முகம்மதிய ஆண்டின் முதல் மாதத்தின் முதல் பத்து நாட்களில் கொண்டிடாடப்படும் பெரிய நோன்பு.
Mohawk
n. வட அமெரிக்க செவ்விந்திய இனத்தவர், வட அமெரிக்க செவ்விந்திய இனத்தவர் மொழி, பனிக்கட்டிச் சறுக்கல் இயக்கவகை.
Mohock
n. (வர) வீம்பர், பதினெட்டாம் நுற்றாண்டுத் தொடக்கத்தில் லண்டன் நகரத்தெருக்களில் இரவு நேரங்களில் மக்களை அலைக்கழித்துவந்த உயர்குடி வீணர் குழுவினர்.
mohur, gold mohur
n. மோகரா, பதினைந்து ரூபாய் மதிப்புள்ள பழைய பொற்காசு.
moider
v. (பே-வ) குழப்பு, திகைப்பூட்டு, அலைக்கழி.
moidore
n. இருபத்தேழு ஷில்லிங்கு மதிப்புள்ள முன்னாளைய போர்ச்சுககீசியப் பொற்காசு.
moiety
n. பாதி, அரை, இருகூறுகளில் ஒன்று.