English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
mustable
a. மாறக்கூடிய, மாறும் இயல்புள்ள.
mustang
n. மெக்சிகோ, கலிபோர்னியா, பகுதிகளிலுள்ள காட்டுக்குதிரை.
mustard
n. கடுகு, சுவைமிக்க பொருள், ஆர்வ ஊக்கமுள்ளவர்,
mustard-pot
n. மேசைக் கடுகுக்கலம்.
muster
n. திரளணி, மேற்பார்வை இடுவதை எதிர்நோக்கிக் கூடும் பேரணி, எண்ணிக்கைத் தணிக்கைக்கான கூட்டணி, மொய்திரள், பேரவை, தொகுதி, (வினை) திரளணி கூடு, ஒருங்கு திரட்டு, குழுமு, மனவுரம் வகையில் வரவழை, உடல்வலிமை ஒருங்குதிரட்டு.
muster-book
n. படைத்துறைப் பதிவேடு.
muster-rool
n. அணியேடு, படைவீரர் பெயர்க் குறிப்பீட்டுப்பட்டியல்.
musty
a. பூஞ்சைக்காளான் பிடித்த, ஊசிப்போன, ஊசல் வாடையுடைய, ஊசிச்சுவைகேடான, நாட்பட்ட, பழமைப்பட்ட, காலங்கடந்த.
mutation
n. மாற்றம், மாறுபாடு, (உயி) வகைமாற்றம், மாறுதலடைந்து புது உயிரினந் தோன்றுதல்.
mutatis mutandia
adv. வேண்டிய மாறுதல்களுடன்.
mute
-1 n. ஊமை, ஊமர், ஊமைக்கூத்து நடிகர், வாய்திறவாதிருப்பவர், ஊமைப்பணியாள், கூலித் துயர்கொண்டாடி, இசைநரம்படக்கும் தண்டு, இசைக்கருவி அதிர்வடக்கிப் பொறி, இசைக்குழல்ட மந்தப்பட்டை, (சட்) வழக்காடா திருப்பவர், (ஒலி) தடைமெய்யொலி,. தடை ஒலி மெய்எழுத்து, ஊமை எழுத்து, ஒலிப்பற்ற எழுத்து, (பெயரடை) ஊமையான, பேசாத, ஓசையற்ற, வேட்டைநாழூ வகையில் குரைக்காத, பேச்சில் தெரிவில்லாத, சைகையால் தெரிவிக்கிற, ஒலிவகையில் உறுப்புத்தடையுடைய, தடை ஒலியான, எழுத்து வகையில் ஒலிக்கப்படாத, (வினை) ஒலி அடக்கு, ஒலித்தடங்கல் செய், இசைக்கருவியின் ஒலியை மந்தமாக்கு.
muter
n. முணுமுணுப்பு, முணுமுணுப்புச் சொற்கள், (வினை) தாழ்ந்த குரலிற் பேசு, முணுமுணுப்பு, தௌிவில்லாமற் பேசு, குறைசொல்.
mutilate
v. உறுப்புக்குறை, முடமாக்கு, உருக்கெடு, உருச்சிதை, வெட்டிக்குறை, உறுப்பைப் பயனற்றதாக்கு, நுற்பகுதிகளை நீக்கி குறைப்பட்டதாக்கு.,
mutineer
n. அரசியல் புரளியாளர், ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சியாளர், கிளர்சிப் படைவீரர், மேலாட்சிமீறி எழுதுபவர்.
mutinoius
a. புரளி செய்கிற, எதிர்ப்புக்கிளர்ச்சி செய்கிற, மீறி எழுகிற, அடங்காகெதிர்க்கிற, கிளர்ச்சி செய்கிற, கலகம் செய்கிற, கலவரம் செய்கிற.
mutiny
n. அரசியற்புரளி, ஆட்சி எதிர்ப்புக்கிளர்ச்சி, படைவீரர் கலகம், கலகம், கிளர்ச்சி, கலவரம், சட்டப்படியான, அதிகாரத்தை வெளிப்படையாகப் புறக்கணிக்குங் கலகம், படைத்தலைவர்களுக்கு எதிரிடையாகப் படைவீரர்கள் செய்யுங் கலகம்.
mutism
n. பேசாநிலை, மௌனம், ஊமைத்தன்மை.
mutograph
n. இயங்குபொருளைத் தொடர்பட வரிசைப்படுத்தும் கருவி அமைவு, (வினை) இயங்குபொருளைத் தொடர்பட வரிசைப்படுத்திக்காட்டு.
mutoscope
n. இயங்கு பொருளின் தொடர்வரிசைப்படத்தைக் காட்சி காட்டுங்கருவி.