English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lampblack
n. புகைக்கரியிலிருந்து செய்யப்படும் கருவண்ணப்பொருள்.
lampion
n. வண்ண ஒளியலங்கம், எண்ணெயும் திரியுங்கொண்ட விளக்கு வைக்கப்படும் வண்ணக் கண்ணாடிக்கலம்.
lamplighter
n. தெருவிளக்கு ஏற்றபவர்.
lampoon
n. கீழ்த்தர வசைப்பாடல், தாக்கு வசைப்பாட்டு, பொறுப்புடன் கூடிய நேரடி வசையுரை, (வினை) தாக்கு வசைப்பாட்டியற்று,. தாக்கி எழுது.
lamppost
n. தெருவிளக்கத் தூண், விளக்குக்கம்பம்.
lamprey
n. விலாங்கு மீன் போன்ற மீன்வகை.
Lancastrian
n. லங்காஷயர் அல்லது லங்காஸ்டர் என்னும் பகுதியின் குடிமகன், (வர.) ரோசாமலர்ப் போர்களில் லங்காஸ்டர் கோமகன் மரபினரைத்தலைவராகக் கொண்ட சிவப்பு ரோசாக் கட்சியினர், (பெ.) லங்காஷயர் அல்லது லங்காஸ்டரைச் சார்ந்த (வர.) பண்டைய ரோசா மலர்ப்போரில் செவ்வண்ண ரோசாமலர்க் கட்சியைச் சார்ந்த.
lance
n. ஈட்டி, மீனெறிவேல், திமிங்கில வேட்டைக்குரிய வேல், (வினை) ஈட்டியினாற் குத்து, (செய்) எறி, தூக்கி வீசு, தூக்கி எறி, கடலில் வீசு, (மரு.) அறுவைச் சிறுகத்தியினால் குத்து, அறுத்துத் திற, ஈட்டியை ஊடுருவிச் செலுத்து.
lance-fish
n. ஈட்டி போன்ற மீன்வகை.
lance-sergeant
n. படைத்துறையில் ஆணை முதல்வராகப் பணியாற்றும் ஆணைமுகவர்.
lance-snake
n. அமெரிக்க நச்சுப்பாம்பு வகை.
lancecorporal
n. படைத்துறைப் பணியாளர்களில் ஒருபடியினர், துணையாணை முகவர்.
lancelet
n. முதுகெலும்புடைய உயிரினத்தின் மிக்க கீழ்ப்படி உயிரினமான மீன்வகை.
Lancelet,
n. -1 மீன்வகை, உண்மையான முதுகெலும்புள்ள கீழுயிர் வகை.
lanceolate
a. ஈட்டித்தலை போன்ற வடிவுடைய, அடியகன்று இருபுறமும் முனைநோக்கிக் குவிகின்ற.
lancer
n. குதிரைப்படைவீரன், முன்பு ஈட்டி தாங்கியிருந்த குதிரைப் படைவீரன்.
lancers
n. pl. நான்கு அல்லது நான்குக்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடனவகை, நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடைவகை க்கான இசை மெட்டு.
lancet
சூரி, அறவை மருத்துவக் கூர்ங்கத்தி, கூர்முகட்டு வளைவு, கூர்முகட்டுப் பலகணி.
lancewood
n. வண்டி அடிக்கட்டை-தூண்டிற்கோல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தப்படுங் கெட்டியான உழைப்பாற்றல் மிக்க மேலை இந்திய மரவகை.