English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lancinating
a. நோவு வகையிற் கூர்மையான, குத்தலான, முனைப்பான.
land
n. நிலம், நிலப்பரப்பு, நிலவுலகின் கூறு, கரை, தரை, உலகு, தேசம், நாடு, அரசுப்பகுதி, மாவட்டம், வட்டாரப்பகுதி, நில உடைமை, விளைநிலம், வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு, பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி, (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு, ஊர்தியிலிருந்து இறக்கு, மீனைக் கரைக்குக் கொண்டு சேர், இறக்குமதி செய், கீழே இறக்கு, தரைமீது வை, கப்பலிலிருந்து இறங்கு, விமான வகையில் நிலத்தில் இறங்கு, குதித்து இறங்கு, விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு, சரக்கு வகையில் இறக்கப்பெறு, கீழிடு, நிலத்தில் ஊன்று, நிலைநாட்டு, கொண்டுசேர், கைப்பற்று, கைக்கொள், தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள், சென்றுசேர், வந்திறங்கு, தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள், சென்றுசேர், வந்திறங்கு, நிலைக்கு ஆளாகு, அடிகொடு, தாக்கு, பரிசு வகையில் வென்று பெறு, பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர், பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை, மண்ணை வெட்டிக்கிளறு, தோண்டியெடு, மண்கொண்டு அடை, முடிவாகப் பெறு.
land-agency
n. பண்ணைநில மேற்பார்வைப்பணி, நில உடைமை மாற்று வணிக நிலையம்.
land-agent
n. பண்ணைநில மேற்பார்வையர், நில உடைமை மாற்று வணிகர்.
land-breeze
n. கரைக்காற்று, கரையிலிருந்து கடல்நோக்கி வீசுங்காற்று.
land-carriage
n. நிலவழிச் சரக்குப் புடைபெயர்ப்பு, கரை வழிப்பெயர்ச்சி.
land-force, land-forces
n. pl. நிலத்துறைப்படை, கரைப்படைவீரர் தொகுதி.
land-hunger
n. நிலம் கைப்பற்றும் பேரவா.
land-hungry
n. நிலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற பேராவலுள்ள.
land-jobber
n. நிலத்தை வாங்கி விற்று ஆதாயம் பெறுவதில் துணிகரச் சூதாட்ட வேட்டையாடுபவர்.
land-locked
a. நிலஞ்சூழ்ந்த,நில அடைப்புற்ற, கிட்டத்தட்ட நிலத்தால் நாலாபக்கமுஞ் சூழப்பட்ட.
land-service
n. படைத்துறைப் பணி.
land-shark
n. கரையிலுள்ள கப்பலோட்டிகளைச் சுரண்டி வாழ்பவன்.
land-sick
n. கப்பல் வகையில் நிலம் மிக அருகிலிருப்பதால் இயங்குவதில் தடைப்படுகிற.
land-swell
n. கரைகடந்த கடவலைப்பாய்ச்சல், கரைமீது தாவும் அலையெழுச்சி.
land-tie
n. சுவர்தாங்கிக் கட்டுமானம், சுவர்தாங்கி உத்தரம், உதைகல், உதைகால்.
landau
n. மடிப்பு முகட்டுவண்டி, முகட்டை முன்புறமோ பின்புறமோ மூடித்திறக்கவல்ல நான்கு சக்கரவண்டி.
landaulet, landaulette
n. மடிப்பு முகட்டுப் பெட்டி வண்டி, முகட்டை முன்புறமோ பின்புறமோ திறக்கவல்ல நான்கிருக்கை மூடுவண்டி.
landbank
n. நில அடமானப் பொருளகம்.