English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lordosis
n. (மரு.) தண்டெலும்பின் முன் நோக்கிய வளைவு.
Lords
n. லண்டன் நகரத்திலுள்ள மரப்பந்தாட்ட வெளி, மரப்பந்தாட்டக்குழுவின் தலைமை அலுவலகம்.
lordship
n. பெருமகன் பட்டம், பெருமகன் ஆட்சி, பெரு மகன் ஆட்சிப் பகுதி, பெருமகன் ஆட்சியுரிமை, மேலாண்மை ஆட்சி.
lore
-1 n. புலமை, கல்விச் செல்வம், கலையறிவுத் தொகுதி, தனிஆய்வுத்துறை மரபுச் செய்தித் தொகுதி, கோட்பாட்டுத் தொகுதி.
Lorettonian
n. ஸ்காத்லாந்தில் லோரெட்டோ பள்ளியின் உறுப்பினர், (பெ.) லோரெட்டோ பள்ளியினைச் சார்ந்த.
lorgnette
n. (பிர.) இசைநாடக தொலைநோக்குக் கண்ணாடி.
loricate
a. (வில.) எலும்பு செதிள் தோடு முதலியவற்றாலான உடற்காப்புக் கவசத்தினையுடைய.
lorikeet
n. ஒளிமிக்க வண்ணங்கள் கொண்ட சிறு கிளி வகை.
loriner
n. (வர.) கடிவாளம் குதிமுள் செய்பவர்,
loris
n. இரவு நேரங்களில் நடமாடுகிற வாலற்ற மெலிந்த உருவுடைய பாலுணி விலங்குவகை.
lorn
a. (செய்.) கைவிடப்பட்ட, தனிமையான, மனித நடமாட்டமற்ற.
lorry
n. பார உந்து, பார மோட்டார் வண்டி, இருப்புப் பாதைக் கட்டைவண்டி.
Lorry Booding office
சரக்குந்துப் பதிவீட்டலுவலகம், சரக்குந்து முகவர், சரக்குந்துப் பதிவு அலுவலகம்
lory
n. பளபளப்பான வண்ணச்சிறகுகள் கொண்ட கிளிபோன்ற வகை.
lose
v. இழ, இழக்கப்பெறு, தொலைத்துவிடு, கெடப்பெறு, கைதவறவிடு, கைநெகிழவிடு, மாள்வு மூலம் பிரிவுறப்பெறு, மாளப்பெறு, இழந்து கையறவுறு, உறவு அகலப்பெறு, தொடர்பு நீங்கப்பெறு, உடைமை நீங்கப்பெறு, பறிமுதல் செய்யப்பெறு, பந்தய முதலியன கையிழக்கப்பெறு, இழப்பு உண்டாகப்பெறு, பொருட்டசேதமடை, குறைபாடு அடை, நலம்பாதிக்கப் பெறு, ஆற்றலிழ, சோர்வுறு, செயல் பிழை, வழி தவறு, காணாமல் திகைப்புறு, வீணாக்கு, பயனின்றிக்கழி, பயனிழ, பயனில்லாமல் போ, வாய்ப்பிழ, வண்டி முதலியவற்றிற்கான நேரம் தவறு, தோற்றிழ, தோல்வியுறு, கெலிப்பிழ, தோல்வியுறச்செய், தோல்விக்காரணமாயமை, நிறைவேறாமற்போ, தன்வயமழியச்செய், முனைப்பழியச்செய், மறைப்புச்செய், தோல்வி அணுகுநிலை பெறு.
loser
n. இழப்புக்கு ஆளாகுபவர், தோல்வி ஏற்பவர், ஆட்டத்தில் தோல்விபெறுபவர், பந்தயம் இழப்பவர், பந்தயத்தில் பெற்றிபெறாக் குதிரை.
losing
a. வெற்றி நம்பிக்கையற்ற, வெற்றிவாய்ப்பற்ற, தோல்விக்கே வழிவகுக்கத்தக்க.
loss
n. இழப்பு, நட்டம், இழக்கப்பெற்ற ஆள், இழந்த பொருள், இழப்புத் தொகை, இழப்பிடர், இழப்புக் குறைபாடு.
loss-leader
n. வாடிக்கை கவர்ந்தீர்க்கும் படி நட்ட விலைக்கு விற்கப்படும் பொருள்.
lost
-1 a. இழந்த, கைதுறந்த, துறக்கப்பட்ட, விட்டுப்போன, நம்பிக்கைக்கிடமற்ற, கதிகெட்ட, நற்கதிக்கு வகை கெட்டுப்போன.