English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
longs and shorts
n. லத்தீன் பாவகை, (க-க.) நீளமும் குட்டையுமான பாளங்கள் மாறிமாறி வைக்கப்பட்டுள்ள நிலை.
longshanks
n. நீண்ட காலுடைய பறவை, ஆள்காட்டுங்குருவி, பவழக்காலி.
longshore-man
n. கரையயோரப் பகுதியில் கப்பலிற் சரக்கேற்றுபவர், கடற்கரையோரமாக வேலைசெய்கிற.
longstop
n. மட்டைப்பந்தாட்டத்தில் இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் விடப்பட்ட பந்துகளைத் தடுப்பவர், (வினை) இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் பிடிக்காமல் விடப்பிட்ட பந்துகளைத் தடு.
longue haleine
n. pl. (பிர.) நீடரும்பணி, நீடித்த விடாமுயற்சியும் உழைப்பும் தேவைப்படும் வேலை, புத்தகப்படைப்புத் தொழில்.
lonngitudinal
a. நீளப்பாங்கான நீட்டுப்போக்கான, நிரைகோடு சார்ந்த.
loo
n. வட்டமேசையில் ஆடப்படும் சீட்டாட்ட வகை, சீட்டாட்டத்தில் தண்டத்தொகையைப் பொதுநிதிக்குச் செலுத்தும் நிலை, (வினை) ஆட்டத்தவறுகளுக்காகத் தண்டத்தொகைக்கு உட்படுத்து.
looby
n. முட்டாள், அறிவிலி.
loofah
n. உடல் தேய்ப்புக்குரிய சுரை வகையின் நெற்று.
look
n. நோக்கு, பார்வை, நோட்டம், நோக்குந் திசை, தோற்றம், சாயல், (வினை) நோக்கு, கவனம் செலுத்து, நோட்டமிடு, உற்றுப்பார், நாடு, கவனி, பக்கமாகத்திரும்பு, கண்ணுறு, எதிர்முகமாகு, தோற்று, தோற்றமளி, போலத்தோன்று, திசையில் சாய்வுறு, திசைநாடிச் செல்வது போன்றிரு, எதிர்நோக்கு, நோக்கால் உணர்த்து, நோக்கால் தெரிவி, தேர்ந்துகாண், தேர்ந்ததாராய், கண்டறுசெய், கண்டுறுதி செய், திசைநோக்கி அமைவுறு.
look daggers
குத்திவிடுபவர்போல நோக்கு.
look-out
n. விழிப்பு, காவல், காவல்தளம், காவலாள், காவற்குழு, காவற்படகு, சூழ்நிலக்காட்சி, வருவாய்ப்பு, வளநிலை, தனிப்பொறுப்பு.
looking-glass
n. முகக்கண்ணாடி, நிலைக்கண்ணாடி.
loom
-1 n. நெசவுத்தறி, துடுப்பின் கைப்பிடி.
loon
n. நீர்வாழ் பறவை வகை.
loony
n. பைத்தியக்காரன், கிறுக்கண், (பெ.) பைத்தியமான, கிறக்குப் பிடித்த.
loop
n. கண்ணி, கயிற்று மடிப்பு வளையம், கொளுவி, உலோகக் கம்பிகளின் மடிகிளை, பிரிந்துசேருங் கிளை, மையவிசை இருப்புப்பாதையின் சுழல் மடி வளைவு, பனிச்சறுக்காட்டத்தில் ஒரு திசைக் சறுக்கு வளையம், (வினை) இழைகயிறு முதலியவற்றால் கண்ணியிடு, மடிப்பு வளையமிடு, கொக்கிபோல் வளையச்செய், கொக்கிபோல் வளை, கொளுவு, வளைந்துமடி, சடைமடி, புனைவி, சூழ், சூழ்ந்துபற்று, வளையங்களால் இணை, கொளுவியால் பொருத்து.
loop-hole
n. சுடு மதிற்புழை, காலதர், புழைவாய், காண்பதற்குரிய துளை இடைவழி, தப்பித்துக்கொள்ளும் வழி, சடடமீறி நடப்பதற்குரிய வகைதுறை, (வினை) சுவரில் புழைவாய் அமை.
loop-line
n. பிரிந்துசென்று மீண்டும் இணையுங் கிளை இருப்புப்பாதை.
looper
n. கம்பளிப்புழு, உடலை வில்போல் வளைத்துச் சுருக்குவதன்மூலம் நகர்ந்து செல்லும் புழுவகை, கொக்கி அல்லது கண்ணி போடுவதற்கான கையற்பொறி அமைவு.