English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
loose
n. விடுபாடு, தடைநீக்கம், கட்டுத்தளர்வு, தளர்ச்சி நிலை, தடையற்ற செயலுரிமை, செல்வழி, போக்கிடம், செல்வழி வகைதுறை, செல்கிற உரிமை, (பெ.) தளர்ந்த, கட்டிறுக்கமற்ற, உறுதியற்ற, விறைப்பற்ற, இழுத்துக் கட்டப்படாத, அடர்த்தியற்ற, சுருக்கச்செறிவற்ற, கட்டற்றுப் பெருகிய, கட்டமைவற்ற, கட்டுப்பாடற்ற, தளர்ச்சியான, உதிரியான, விடுபட்ட, எளிதில் பிரிக்கக்கூடிய, (வேதி.) இணைந்திராத, தனிநிலைப்பட்ட, தனித்துத் தொங்குகிற, உறுதியான இணைக்கப்படாத, பொருத்தப்படாத, வரையறையற்ற, திட்டவட்டமாயில்லாத, தௌிவற்ற, பொருத்தமற்ற, சரியாயில்லாத, திருத்தமாயில்லாத, மேலாள் வகையில் கண்டிப்பற்ற, சரியகச் செயலாற்றாத, விதிமுறைக் கட்டுப்பாடற்ற, இலக்கணமுறையமிலமையாத, ஒழுக்கக் கேடான, நெறிதவறான, பேச்சழுத்தமில்லாத, நடைக்கோட்டமுடைய, செயல்திட்பமற்ற, மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத, (வினை) விடுவி, தளர்த்து,படகு வகையில் கட்டவிழ், முடிச்சுக் கழற்று, நங்கூரம் பற்று நெகிழ்வி, முடிகலை, அம்பு செல்லவிடு, விட்டெறி, எய், தடையகற்று.
loose-leaf
a. கண்க்கேடு முதலியவற்றில் தாள்கள் தனித்தனியாகப் பிரித்தெடுகக்கூடிய.
loosen
v. தளர்த்து, நெகிழ்த்து, நாத்தடையை நீக்கு, இறுக்கந் தளர்வுறு, செறிவு குன்று, உறுதி குறைபடு, குடலை இளக்கு, வறட்சியினால் இருமு, ஒழுக்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்து.
loosestrife
n. மலர்ச்செடி வகை.
loot
n. (இ.) கொள்ளை, சூறை, பறிக்கப்பட்ட பொருள், இலஞ்சம்ம, நேர்மையற்ற கைக்கூலி இறுப்பு, (வினை) கொள்ளை யடி, சூறையாடிக் கெண்டுசெல்.
lop
-1 n. சிறு மரக்கிளை, மரக்கொம்பு, கவடு, (வினை) கிளைகளை வெட்டு, கொம்புகளைத் தறி, கிளைகளையும் கவடுகளையும் கழி.
lop-ear
n. தொங்கு காதுடைய முயல்வகை.
lop-ears
n. pl. தொங்குங் காதுகள்.
lope
n. நீண்ட துள்ளலுடைய ஓட்டம், (வினை) நீண்ட பாய்ச்சலுடன் ஓடு.
lophobranchiate
n. கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய மீன், (பெ.) மீன் வகையில் கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய.
lophodont
n. கடைவாய்ப்பில் முகட்டில் குறுக்குப் பள்ளங்களையுடைய விலங்கு, (பெ.) விலங்கு வகையில் கடைவாய்ப்பில் முகட்டில் குறுக்குப் பள்ளங்களையுடைய.
loppings
n. pl. உறுப்புக்குறைப்பு, வெட்டிக்கழிப்பு, வெட்டி வீழ்த்திய பகுதிகள்.
lopsided
a. பக்கங்கள் ஏற்றத்தாழ்வாய் அமைந்த, பக்கங்கள் பெரிது சிறிதாய் அமைந்த, சரிசமநிலையற்ற, ஏறுமாறான.
loquacious
a. வீண் பேச்சுப் பேசுகிற, வம்பளக்கிற, வாயாடித்தனமான, பறவைகள் வகையில் கலகலக்கிற, நீரோட்டவகையில் சலசலக்கிற.
loquat
n. சீன-ஜப்பானிய நாட்டுப் பழமர வகை.
loquitur
v. (ல.) பேசுகிறார்.
loral
a. (உயி.) முகட்டலகு சார்ந்த, பறவைகளின் கண்களுக்கும் அலகின் மேற்பகுதிக்கும் இடைப்பட்ட கூறு சார்ந்த, பாம்புகளின் கண்களுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட கூறுசார்ந்த.
lorcha
n. சீன மேற்கட்டமைப்பும் ஐரோப்பிய அடிக்கட்டும் உடைய கப்பல் வகை.
lord
n. ஆண்டை, தலைவர், அண்ணல், கோமான், முதல்வர், (செய்.) நிலக்கிழார், தொழில் முதல்வர், பண்ணையாட்சிமுறை மேலாளர், கணவர், கொழுநர், (வான்.) ஆட்சிக்கோள், சிறப்பு விண்மீன்குழு, இறைவன், கடவுள், கிறிஸ்து பெருமான, இயேசுநாதர், செல்வர், சீமான், பெருமகன், பெருமகன் மதிப்படைமொழிக் குறிப்பு, உயர்நடுவர் மதிப்புக்குறிப்பு, மதிப்புவிளிமரபுக் குறிப்பு, (வினை) மேலாண்மை செய், மேலாட்சி நடத்து, ஆணவம் செலுத்து, தலைமை உரிமை கொள், மேன்மக்களாக்கு, பெருமகன் பட்டம் அளி.
lordly
a. வீறாப்பான, செருக்குடைய, இறுமாப்பான, ஆதிக்க மனப்பான்மையுள்ள, வீறார்ந்த, விழுமிய, பெருமகனுக்குரிய.