English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lost(2), v.lose
என்பதன் இறந்தகால முற்றெச்ச வடிவம்.
lot
n. தொகுதி, ஓரினக்கூட்டு, ஓரினக்கூட்டாளிகளின் தொகுதி, யோக விற்பனைக்கான சரக்குக்தொகுதி, சீட்டுக்குலுக்குத்தேர்வு, குலுக்குத் தேர்வு முறை, குலுக்குத் தேர்வு முடிவு, ஊழ்வகுப்பமைவு, ஊழ்க்கூறு, யோகம், ஊழ்வாய்ப்பு நிலை, பாக்கியம், செல்வவாய்ப்பு, பங்கு, தனிப்பொறுப்பு, கடமை, வரி, பங்கீட்டுக்கூறு, நிலப்பங்கீட்டு கூறு, நிலக்கூறு. நிலப்பகுதி, (பே-வ.)பெரிய அளவு, ஏராளம், (வினை) நிலம் பங்கிட்டுக் கொடு, சரக்குக் கூறிடு. பொருள் பாத்தீடு செய்.
Lothario
n. கயவர், தீ நெறியாளர்.
lotion
n. (மரு.) கழுவுநீர்மம்.
lottery
n. குருட்டுவாய்ப்புமுறை, திருவுளச்சீட்டுத்தேர்வு முறை, குலுக்குச்சீட்டுப் பரிசுமுறை, விற்பனைக்குலுக்குச் சீட்டு, பொறுக்குச்சீட்டுமுறை, சூதாட்டமுறை.
Lottery centre
பரிசகம், பரிசுச்சீட்டகம், பரிசுச் சீட்டு விற்பனை நிலையம்
lottery-wheel
n. திருவுளச்சீட்டைக் கலைக்கப் பயன்படும் பெட்டியுடன் கூடிய சக்கரம்.
lotto
n. குலுக்குச் சீட்டு போன்ற சூதாட்ட விளையாட்டு.
lotus
n. தாமரை, அல்லியன வகை, சோம்பல் வாழ்வில் ஈடுபாடு உண்டாக்குவதாகக் கருதப்பட்ட கிரேக்க பழங்கதை மரபுச் செடிவகை.
lotus-eater
n. சோம்பேறி, செயலின்றிச் செம்மாந்திருப்பவர், கிரேக்க பழங்கதையில் மரபில் காய்வகை அருந்திச் செம்மாந்திருந்த மக்கள் தொகுதி.
lotus-eating
n. சோம்பல் வாழ்வில் செம்மாந்திருத்தல்.
loud
a. உரத்த, உரத்து ஒலிக்கிற, வல்லொலியான, முழக்கமான, கூச்சலான, கூச்சலிடுகிற, பகட்டான, முனைப்பான, தௌிவாகத் தெரிகிற, பார்வையைக் கவர்கின்ற, வெளிப்பகட்டு மிகுந்த, (வினையடை) உரக்க, வல்லொலியாக.
Louis Quinze
a. கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினைந்தாம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
Louis Seize
a. கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினாறாம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
Louis Treize
a. சிற்ப ஓவிய ஒப்பனைக் கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதின்முன்றாம் லுயி காலத்துக்குரிய பாணியிலமைந்த.
louis, louis-door
n. ஏறத்தாழ 20 பிராங்கு மதிப்புள்ள முற்காலப் பிரஞ்சுப் பொன் நாணயம்.
lounge
n. ஓய்வு கொளல், ஒய்யார நடமாட்டம், மெல்லுலாவிடம், முன்கூடம், முன்கட்டு, சாய்ப்பு, உட்கார்ந்திருப்பதற்குரிய அறை, ஓய்வுச் சாய்விருக்கை, தாழ்ந்த சாய்வுக்கிடக்கை, (வினை) உலாவித்திரி, சோம்பியிரு, ஒய்வாகக்கிட, சாய்ந்திரு, பெயலின்றிப் பொழுது கழி.
lour
n. முகச்சுளிப்பு, புருவநெரிப்பு, சிடுசிடுப்பு, சிடுசிடுத்த தோற்றம், வானம் முகில் முதலியவற்றின் கறுத்திருண்ட தோற்றம், (வினை) முகத்தைச்சுளி, புருவத்தை நெரி, சிடுசிடுப்புக்கொள்.
Lous Quatorze
a. சிற்ப ஓவிய ஒப்பனைக் கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினாக்காம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.