English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
loins
n. pl. அரை, இடுப்பு, போலி விலா எலும்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி, தண்டெலும்பின் இடுப்புப்பகுதியை உட்படுத்திய இடுப்பிறைச்சி.
loir
n. சுண்டெலிக்கும் அணிலுக்கும் இடைப்பட்ட வளைதோண்டி வாழும் கொழுத்த கொறிவிலங்கு வகை.
loiter
v. சோம்பித்திரி, வறிதே காலந்தாழ்த்து, இடையிடையே தங்கித் திரி, அலைந்து திரிந்து பொழுது போக்கு, சுற்றித்திரி, பின்தங்கு.
loll
v. நா வகையில் வெளியே நீட்டித் தொங்கவிடு, சோம்பலாக நில், கிடந்துருள், சாய்ந்திரு, செயலற்ற முறையில் மேலே சாய்ந்துகிட.
Lollard
n. பதினான்காம் நூற்றாண்டில் வைகிளிப் என்பவரைப் பின்பற்றிய சமய எதிர்ப்பாளருள் ஒருவர்.
lollipops
n. pl. இனிப்புத் தின்பண்டம், சர்க்கரையில் பெதிந்த பழப்பண்டம்.
lollop
v. தள்ளாடு, தடுமாறி விழு, தயங்கி நட, சோம்பலோடு அருவருப்பாக நடந்து செல்.
Lombard
n. இத்தாலி நாட்டை ஆறாம் நூற்றாண்டில் கைப்பற்றியவர்களுள் ஒருவர், லம்பார்டியில் வாழ்பவர், (பெ.) இத்தாலி நாட்டை ஆறாம் நூற்றாண்டில் கைப்பற்றிய செர்மானியர்களைச் சார்ந்த, லம்பார்டி பகுதிக்குரிய.
Lombardic
a. லம்பார்டியைச் சார்ந்த, லம்பார்டி பகுதி மக்களுக்குரிய, ஹ்-13 ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட சிற்பப் பாணிக்கு உரிய, 15-16-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய ஓவியக்கலைப் பாணிக்கு உரிய.
loment
n. முதிர்வுற்றபோது ஒவ்வொரு விதைக்கணுவாக வெடிக்கும் காய் நெற்றுவகை.
london clay
n. (மண்.) தென்கிழக்கு இங்கிலாந்தின் மூன்றாம் பரிவு மண்ணியற் படிவு.
london ivy
n. லண்டன் மாநர மூடுபனி.
London particular
n. (பே-வ.) லண்டன் நகரத்திற்கே தனிச் சிறப்பாயமைந்த மூடுபனி வகை.
lone
a. தனிமையான, துணையற்ற, தோழமையற்ற, அருநிகழ்வான, பலகாற்போகாத, குடியற்ற, குடியில்லாத, தனித்த, தனிமையை உணர்கிற, தனிமையை எண்ணச் செய்கிற.
lonely
a. தனித்த, துணையற்ற, ஒதுக்கமான, ஆளரவமற்ற, நடமாட்டமில்லாத.
long
-1 n. நெடுங்காலம். நீளிடை, நீண்ட கால இடைவெளி, விரிவிளக்கம், நீளசை, நெடில் ஒலி, (க-க.) நீள்பாளம், (பே-வ.) நெடு விடுமுறை, (இசை.) ஈரிடைச்சுரம், (பெ.) நீளமான, நெடிய, நெட்டையான, நீள்கால அளவுடைய, நீடு நிகழ்கிற, நெடுந்தொலைவான, நெடுந்தொலைவு எட்டுகிற, நெடுந்தொலைவாற்றலுடைய, தலைவகையில் உயரமிக்க, முகவகையில் ஒடுங்கிய, சோர்ந்த தோற்றமுடைய, கால நீடித்த, நீடுவழக்கான, நீடித்த பழமையுடைய, நெடுங்காலத்திய, முன்னோக்குடைய, தொலைநோக்குடைய, தொலைவிளைவுடைய, தொலைவிலிருந்து செயலாற்றத்தக்க, கண் பார்வையில் தொலைவுத்திறக்கோளாறுடைய, நீட்டான, நீட்டளவுடைய, காலநீடிப்புடைய, நெடிது தொடர்ந்த, நீளமிக்க, நீண்டுசெல்கிற, அளவில் விஞ்சிய, பெரிய, நெடுநீளமான, வரம்பு கடந்த நீட்சியுடைய, சோர்வூட்டுகிற, ஒலி-அசை வகையில் கால அளவு நீட்டிப்புடைய, (வினையடை) நீண்டகாலமாக, நெடுநேரமாக, காலநீடித்து, கால முழுவதும், நீணடகால அளவில்.
long-bill
n. நீண்ட அலகுள்ள சதுப்புநிலப் பறவை வகை.
long-bow
n. கையால் வளைத்து இறகிணைப்புடைய நீண்ட அம்பு கொண்டு எய்யும் வில்.
long-clothes
n. கைக்குழந்தையின் ஆடைகள்.