English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
locksmith
n. கொல்லன், பூட்டுச் செய்பவன், பூட்டுகளைப் பழுது பார்ப்பவன்.
lockspring
n. கடிகார மேல்மூடியை மூடவைக்கும் சுருள் வில்.
lockup
n. பள்ளி அடைப்பு, கடையடைப்பு, அடைப்பு நேரம், மூலதனக் கட்டப்பாடு, கட்டுப்பட்ட மூலதனம், சிறைக்கூட மனை, கைதிகள் தற்காலத் தங்கலாகப் பயன்படும் மனை, சிறைக்கட்டறை.
loco
-1 n. புகைவண்டி இயக்குபொறி.
loco citato
adv. (ல.) ஏற்கனவே மேற்கோளாகக் காட்டப்பட்ட பகுதியில்.
loco-disease
n. அமெரிக்க அவரைக்குடும்ப நச்சுச் செடிவகையைத் தின்பதனால் கால்நடைகளுக்கு ஏற்படும் மூளை நோய்.
locomote
v. (உயி.) புடைபெயர், இடம்விட்டு இடம் பெயர்.
locomotion
n. புடைபெயர்வு, இடம்விட்டு இடம் பெயர்வு, இடம் பெயரும் ஆற்றல், பயணம், செயற்கை இடமாற்ற முறை.
locomotive
n. தொடர்வண்டி இயக்கு பொறி, தன் ஆற்றலாலேயே இடம் பெயர்ந்தியங்கும் பொறி, இடம்பெயர்வு செல்ல உதவும் விலங்கு, (பெ.) புடைபெயர்ச்சிக்குரிய, இடம் பெயரும் ஆற்றலுடைய, ஓரிடத்தில் நிலைத்திராத,. தானே தன்ஆற்றலால் புடைபெயர்ந்தியங்குகிற, இடத்துக்கிடம் கொண்டு செல்கிற.
locomotor
n. புடைபெயர் வண்டி, புடைபெயர்பவர், (பெ.) இடம்விட்டு இடம்பெயரும் ஆற்றலுள்ள, ஓரிடத்தில் நிலைத்திராத.
locomotory
a. இயங்குகிற, ஓரிடத்தில் நிலைத்திராத, இடம் பெயர்வுடைய.
loculus
n. (வில., தாவ., உள்.) பள்ளக்குழிகளுள் ஒன்று.
locus
n. இடம், குறிப்பிடம், நிலையிடம், (கண.) புள்ளிவரைதளம் ஆகியவற்றின் திரிபடிவம்.
locust
n. வெட்டுக்கிளி, அழிகேடன், சால் விழுங்கி, நடு நிலக் கடலக மரவகையின் கனி, இலவங்க வகை மரக்கொட்டை, இலவங்க மரவகை நெற்று.
locust-bird, locusteater
n. வெட்டுக்கிளியை உண்ணும் பறவை வகை.
locust-tree
n. கொம்பு போன்ற காயுடைய நடுநிலக் கடலக மரவகை.
locution
n. பேச்சு, பேசும்பாணி, சொல்நடை, சொற்றொடர்ப்பாங்கு, நடைமரபுப் பாங்கு.
locutory
n. துறவி மடங்களில் உரையாடல் அறை, வரவேற்புக்கூடம், துறவிமட வாசிகளுக்கும் வெளியார்களுக்கும் இடையே பேட்டிக்கான கம்பியழி.
lode
n. நீர்செல்லும் வழி, வாய்க்கால், நீர்வழி, சதுப்புநிலக்கழிநீர்க் கால்வாய், சதுப்பு நிலங்களிலுள்ள உலோகத்தாதுக் கொடிக்கல்.