English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
loansociety
n. கடனுதவிச் சங்கம், தவணைப் பங்குவரி செலுத்தும் உறுப்பினர்களுக்கு வரி நிதியிலிருந்து கடன் கொடுத்துதவும் சங்கம்.
loath-to-depart
n. பிரிவுவாழ்த்துப் பாடலிசை.
loathe
v. வெறு, அருவருப்புடன் பார், வெறுப்புக்கொள்.
loathly
a. (செய்.) வெறுக்கத்தக்க, அருவருப்பான.
loathsome
a. அருவருப்பூட்டுகிற, வெறுக்கத்தக்க, குமட்டலுண்டாக்குகிற.
lob
n. மரப்பந்தாட்டத்தில் கீழ்க்கைப் பந்துவீச்சு, புல்வெளி வரிப்பந்தாட்டத்தில் உச்சாணிப் பந்துவீச்சு, (வினை) உருண்டு புரண்டோடு, ஏடாகோடமாக நட, தட்டுத்தடங்கலுடன் இயங்கு, பந்தைச்சுழற்றி உயர எறி, பந்தைச் சுற்றுவிசையுடன் மெல்ல எறி.
lobate
a. (தாவ.) தொங்கு சதைகளுள்ள, காது வகையில் மடல்களுள்ள, நண்டு வகையில் கொடுக்குகளுள்ள.
lobby
n. தலைவாயில், முகப்பு அறை, முகப்புக்கூடம், இடைகழி, தங்கறை, புகுமுகக்கூடம், பல அறைகளுக்கு வழி முகமான பொதுக்கூடம், சட்டமன்றப் புறக்கூடம், பொது மக்கள் உறுப்பினரைக் கண்டு பேசுவதற்குரிய புறவாரம், வாக்குப்பதிவு முன்னிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் கடந்து செல்லும் ஊடுவழிகள் இரண்டில் ஒன்று, (வினை) சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தேடு, உறுப்பினர் ஆதரவு திரட்டிச் சட்டப் பகர்ப்பை நிறைவேற்று, உறுப்பினரிடம் மன்றாடி வாக்குச் சேர், புறவாரங்களில் ஊடாடித்திரி.
lobcouse
n. (கப்) காய்கறி சேர்த்து வதக்கப்பட்ட இறைச்சி உணவுவகை.
lobe
n. மடல், தொங்குசதை, இதழ் தட்டை வட்டாகத்தொங்கும் பகுதி, அலகு, ஓரப்பிளவுக்கூறு.
lobelia
n. நீலம் சிவப்பு ஊதாநிறப் பிளவிதழ் மலர்களையுடைய மூலிகை வகைச்செடி.
loblolly boy, loblolly man
n. (கப்) அறுவை மருத்துவரின் கைத்துணைவர்.
lobster
n. பெருங்கடல் நண்டுவகை, கடல்நண்டிறைச்சி.
lobster-eyed
a. முண்டக்கண்ணுடைய, முன்புறமாகப் பிதுங்கிய கண்ணுள்ள.
lobster-pot
n. அலவன் குடுவை, நண்டுகளைப் பிடிக்கப் பயன்படும் கூடை.
lobule
n. காதின் சிறமடல், சிறு இதழ்.
lobworm
n. மீன் தூண்டிலிற் பயன்படுத்தப்படும் மண்புழு.
local
-1 n. நிகழ்ச்சி நடந்த இடம்.
localism
n. தனியிடப்பற்று, திணைவட்டாரப்பற்று, திணைநிலைக் கருத்துக்குறுக்கம், திணை வட்டாரச் சார்பு, வட்டார மரபு, வட்டார வழக்கு.