English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
livelihood
n. வாழ்க்கைத் தொழில், பிழைப்பு.
livelong
a. நெடு நீளமான, நெடுநீளமாக நீடித்த, விடாது நீண்ட.
lively
a. உயிர்த்தன்மையுள்ள, உயிராற்றலுடைய, உயிர்த்துடிப்புடைய, உயிர்த்தோற்றமுடைய, மெய்ப்பாடுடைய, முனைப்பான விளக்கம் வாய்ந்த, சுறுசுறுப்பான, கிளர்ச்சி வாய்ந்த, எழுச்சிதருகிற, உவகையூட்டுகிற, சுவையார்ந்த, நிறவகையில் பளபளப்பான, படகு வகையில் அலைமீது எழுந்தெழுந்து செல்கிற, துள்ளிசையான, இக்கட்டார்ந்த, நெருக்கடியான.
liven
v. ஒளிர்வூட்டு, கிளர்ச்சியூட்டு.
liver
-1 n. ஈரற்குலை, உணவாகப் பயன்படும் விலங்குகளின் ஈரல் தசை.
liver wort
n. ஈரல்நோய்க்குப் பயன்படுத்தப்பட்டு வந்த மூலிகைச் செடி வகை.
liver-colour
n. ஈரல் நிறம், கருஞ்சிவப்பும் பழுப்பும் கலந்த நிறம்.
liver-complaint
n. ஈரல் நோய்.
liver-line
n. கைவரை நுலில் குறிப்பிடத்தக்க உள்ளங்கைக் கோடுகளில் ஒன்று.
liveried
a. தொழிலுடையனிந்த, பணிச்சின்னந் தாங்கிய.
Liverpudlian
n. லிவர்பூல் என்னும் நகரத்தில் வசிப்பவர், (பெ.) லிவர்பூல் நகரில் வசிக்கிற.
livery
-1 n. பணியாடை, பணிச்சின்னம், நகரத்தொழிற் குழுவுறுப்பினர் அடையாள ஆடை, தனியாடை, தனித்தோற்றம், நகரத்தொழிற்குழுவின் உறுப்பாண்மை, பணியாளர் உணவு உடை உதவிப்படி, குதிரை தீவனப்படி, (சட்.) உடைமை உரிமை ஒப்புவிப்பு.
livery servant
n. கஞ்சுகன்.
livery stable
n. குறிப்பிட்ட கட்டணம் பெற்றுத் திவனமளித்துப் பேணி வளர்ப்பதற்கும் வாடகைக்கு வமிடுதற்கும் உரிய குதிரை இலாயம்.
liveryman
n. பணிச்சின்னமணிந்த ஊழியர், நகரத் தொழிற்குழு உறுப்பினர், படிபெற்றுக் குதிரைக்குத் தீவனமிட்டுப் பேணும் பொறுப்புடையவர்.
livid
a. வெளிறிய நீல நிறமான, கன்றிப்போன, (பே-வ.) கடுஞ்சீற்றமுடைய.
living
n. பிழைப்பு, வாழ்க்கைத் தொழில், வாழ்க்கைத்தேவை, வாழ்க்கைமுறை, திருக்கோயில் மானியம், (பெ.) வாழ்கிற, உடனிணை வாழ்வுயை, இப்பொழுதுள்ள, ஒத்தகால வாழ்வுடைய, முழுதொத்த, சரியொத்த, வழக்காற்றிலுள்ள.
living-room
n. பகல் நேர அறை.
livre
n. (பிர.) பழைய பிரஞ்சு நாணயம்.
lixiviate
v. கரையும் பொருளையும் கரயாப் பொருளையும் வடித்திறுத்துப் பிரித்தெடு.