English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lizard
n. பல்லி, பாடும் அழிகய பறவை வகை.
llama
n. தென் அமெரிக்காவில் கம்பளி போன்ற மயிரடர்ந்த குட்டையான திமிலற்ற பொதிசுமக்கும் ஒட்டக இன விலங்கு வகை, ஒட்டக இன விலங்கின் கம்பளி மயிர்.
llanero
n. மரங்களற்ற தென் அமெரிக்க சமவெளியில் வாழ்பவர்.
Lloylds
n. கப்பற்பிணைக் காப்பீடேற்பவர்களின் சங்கம்.
lo
int. அதோ காண், அந்தோ, ஐயோ.
Lo,ndon smoke,
n. மங்கிய சாம்பல் நிறம், வெளிறிய ஈய நிறம்.
loach
n. உணவாகப் பயன்படும் நன்னீர்வாழ் சிறு மீன் வகை.
load
n. சுமை, பளு, தூக்கிச் செல்லும் பொருள், கண்டி, பார அளவை, எடையாகப் பயன்படும் பொருள் (மின்)மின்விசை ஆக்கப்பொறியால் குறித்தகாலத்தில் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவு, மனச்சுமை, கவலை பொறுப்பு, அக்கறை, (வினை) சுமைஏற்று, பாரமேற்று, பளுவால் அழுத்து, ஈயம் வைத்துப் பளுவாக்கு, கப்பல் வகையில் எடையேற்றுக்கொள், பளுத்தாங்கு, எடைப்பொருக்கத்துக்காகக் கலப்படஞ் செய், இன்தேறலுக்கு வலுவூட்ட மட்டப் பொருளைக் கல, தேவைக்குமேல் மட்டுமீறிக் கொடு, துப்பாக்கி முதலியவற்றிற்கு மருந்து திணி, பங்குகளைப் பெரிய அளவிலி வாங்கு, வாழ்க்கைக் காப்பீட்டுத் தவனைகளுக்கு மிகை படக் கட்டணம் விதி.
load-displacement, load-draught
n. எடைமான மூழ்கு வரை, ஏற்றிய எடையால் கப்பல் அமிழும் வரைமட்டம்.
load-lilne
n. பாரவரை, அளவுசுமை ஏற்றப்பட்டதைக் காட்டுங் கோடு.
loaded
a. வாதீட்டில் ஒருதிசைச் சார்புமிக்க, வாத வகையில் போராட்டச் செய்திகளை உட்கொண்ட.
loader
n. வேட்டையாட்களின் துப்பாக்கிகளுக்கு மருந்து திணிக்கும் பணியாள், பளுவேற்றம் பொறி.
loads
n. pl. (பே-வ.) ஏராளம், பெரிய அளவு,கழிமிகை.
loadstone
n. காந்தக்கல், காந்தம்.
loaf
n. ரொட்டித் துண்டு, ஊதப்ப அளவுக்கூறு, பொங்கப்ப அளவுக்கூறு, கூம்பு வெல்லக்கட்டி, அச்சுவெல்லத் துண்டு, கோசுக்கீரை வகைகளின் உருள் தலைப்பகுதி.
loafiing
n. சோம்பித்திரிதல், காலத்தை வீணிற் கழித்தல்.
loam
n. களிச்சேற்று வண்டல், செங்கல் செய்வதற்கான களிமணல் செத்தைக் கலவை, மக்கிய பொருள் கலந்த வளமிக்க வண்டல் உரம்.
loan
n. கொடுக்கும் கடன்தொகை, கடனுதவிக் தொகை, இரவல், கடன் கொடுப்பு, பொதுக் கடனளிப்புத் தொகை, அரசியல் ஒப்பந்த உரிமைமுன்பணப் பேறு, மேற்கொண்ட அயல்வரவுக் கூறு, அயல் மொழி வரவுச் சொல், அயல் இனப்பண்பு, (வினை) கடன்கொடு, கொடுத்து உதவு.
loanholder
n. கடனீட்டுப் பத்திரங்களைக் கைவசமாகக் கொண்டிருப்பவர், பொருளை அடைமானம் பெற்றவர்.
loanoffice
n. கடனுதவிப் பணிமனை, அரசாங்கத்துக்குரிய தவணை வரிகளைப் பெறும் நிலையம்.