English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lip
n. உதடு, இதழ், உதடுபோன்ற உறுப்பு, இதழ்போன்ற பகுதி, கிண்ணத்தின் வளைவிளிம்பு, துளையின் பக்க விளிம்பு, புண்ணின் வாயலகு, மலரின் இதழலகு, துடுக்கான பேச்சு, துடுக்குத்தனம், (வினை) உதட்டால் தொடு, இதழ் பொருத்து, அலை வகையில் மேவி மீள், தொட்டுவிலகு, உதட்டுக்குள்ளாக முனகு, குழிப்பந்தாட்டப் பந்து வகையில் பந்தினைக் குழிவிளிம்பு மேவும் படி செய்.
lip-deep
a. உதடடளவான, மனமேவாத, உள்ளார்ந்த வாய்மையற்ற.
lip-language
n. இதழியக்கப் பேச்சுமுறை, உதட்டசை வினைப் பயன்படுத்திச் செவிடர்களுக்கும் ஊமைகளுக்கும் கற்பிக்கும் முறை.
lip-reading
n. உதட்டசைவால் செவிடர்களும் ஊமையும் பேச்சுப் பொருளறியும் முறை.
lip-service
n. போலி வழிபாடு, பாவிப்பு.
lipper
n. (கப்.) அலையதிர்வியக்கம், கடற்பரப்பின் திரைப்பு.
lipsalve
n. உதட்டுப் புண் களிம்பு, முகப்புகழ்ச்சி, போலிப் புகழ்ச்சி.
lipstick
n. உதட்டுப்பூச்சு வண்ணக்கோல்.
liquate
v. உருக்கி உலோகங்களைப் பிரி, உருக்கி உலோகங்களைத் துப்புரவு செய்.
liquefy
v. கெட்டிப்பொருள் அல்லது வளிப்பொருளை நீர்மமாக்கு, திண்மம் அல்லது வளிமம் வகையில் திரவமாகு.
liquer
n. மணமும் இன்சுவையும் ஊட்டப்பட்ட கடுந்தேறல் வகை, சர்க்கரையும் சாராயம் அல்லது முந்திரித் தேறலும் கலந்து மணமூட்டப்பட்ட கலவைத்தேறல் வகை, (வினை) தேறலுக்கு மணமுஞ் சுவையும் ஊட்டு, சர்க்கரை முதலியவற்றை உடன்கல.
liquer-frame, liqeur-stand
n. குப்பித்தட்டு, கடுந்தேறல் புட்டிகள் வைக்கும் சட்டம்.
liquer-glass
n. கடுந்தேறல் குடிக்கப் பயன்படும் மிகச் சிறு குவளை.
liquescent
a. நீர்மமாகிற, திரவமாகக்கூடிய, நீர்மமாகும் தன்மையுடைய.
liquid
n. நீர்மம், திரவவடிவுடைய பொருள், ஒழுகியல் ஒலி, (பெ.) நீரியலான, நீர்ப்பொருளின் தன்மையுடைய, நீர்போன்ற, ஒழுகியலான, பளிங்கியலான, எளிதில் ஒளி ஊடுருவும் தன்மைவாய்ந்த, நிலையற்ற, அடிக்கடி மாறும் இயல்புடைய, சொத்துக்கள் வகையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய, ஓழுகிசையான, முரணோசையற்ற. (ஒலி.) மிடற்றொலியல்லாத, உயிரொலி போன்ற.
liquidate
v. கடனைத்தீர், செலுத்தித் தீர்த்துவிடு, தீர்த்துக் கட்டு, ஒழித்துவிடு, அடக்கி ஒடுக்கிவிடு, மூடிவிடு, கூட்டு வணிக வகையில் கொடுக்கல் வாங்கல் கொடுக்கல் வாங்கல் கணக்கெடுத்து மூடு.
liquidation
n. தீர்த்துக்கட்டுதல், கொடுக்கல் வாங்கல் கணக்கெடுத்து மூடுதல், கலைப்பு, தீர்வாட்சி, ஒழுங்குநிலை.
liquor
n. குடிதேறல், வடிநீர்மம், சாராயம் வடிப்பதில் பயன்படும் நீர், கழிவுநீர், கழுவுநீர், கசிவூறல், செய்நீர், கஞ்சி, வடிநீர், உணவு வேகவைத்த நீர், (வினை) தோலைக் கொழுப்பால் அல்லது நெய்மத்தால் பதப்படுத்து, மாவை நீரில் ஊறவைத்துப் புளிக்க வை.
liquorice
n. அதிமதுர வேரிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகவும் தின்பண்டமாகவும் பயன்படும் கருநிறப்பொருள், அதிமதுரம், அதிமதுர வேரையுடைய செடிவகை.
liquorish
a. சாராய விருப்பமுள்ள, குடிவிருப்பைத் தெரிவிக்கிற.