English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lira
n. இத்தாலி நாட்டு நாணய வகை.
lisle thread
n. நுண்முறுக்கிழை.
lisp
n. மழலைச்சொல், தௌிவற்ற ஒலிப்புடைய குழந்தைப் பேச்சு, சகரதகரப்போலி ஒலிப்பு, நீரின் ஒழுகிசை, இலைரகளின் மென்சலசலப்பொலி, (வினை) மழலைச் சொல்லாடு, தௌிவற்ற ஒலிப்புடன் பேசு, குறைபட உச்சரி, சகரத்தினடமாமகத் தகரப்போலி ஒலிப்புடன் பேசு.
lissom, lissome
தொய்வான, ஒசிவான, துவள்வுடைய, இழைவான.
list
-1 n. பட்டியல், பெயர்ப்பட்டி, இனக்குறிப்புப் பட்டி, நிகழ்ச்சிக் குறிப்புப்பட்டி, விலைப்பட்டி, துணி ஓரம், கரை, வகைமாறிய துணியாலான ஓரக்கரை, கரை கிழிந்த கச்சை, (வினை) படைவீரனாகச் செல், பட்டியலில் பதிவு செய், கிழித்த ஆடை ஓரத்தை வைத்துக் கதவை இறுக்கிப் பொருத்து.
listen
v. உற்றுக்கேள், கவனி, விண்ணப்பத்திற்குச் செவிகொடு, அவாவிற்கு இணங்கு, மருட்சிக்கு உள்ளாகு, வேண்டுகோளுக்கு இணங்கு.
listener
n. உற்றுக்கேட்பவர், ஒற்றுக்கேட்பவர்.
listening-post
n. எதிரி நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் அறிந்து கொள்ளும்படி பாசறைக்கருகில் உள்ள இடம்.
listerine
n. நச்சுத்தடை மருத்துக் கரைசல்.
listerize
v. நச்சுத்தடை முறைகளைப் பின்பற்றிக் காயம் ஆற்று.
listless
a. கவனமில்லாத, அக்கறையற்ற, மந்தமான, எழுச்சியற்ற, கருத்தில்லாத, கவையற்ற, முயற்சி செய்ய விருப்பமில்லாத.
lists
n. pl. குதிரைவீரர் ஈட்டிப் போர்க் களரியைச் சுற்றியுள்ள கழிக்கோல் வேலி, பந்தயப் போட்டிக்களம், போட்டிக்களம், வாதிடும் களம்.
lit, v. light
என்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று.
litany
n. இறைமுறையீட்டுப் பாசுரத்தொகுதி, வழிபாட்டிலும் சமய ஊர்வலங்களிலும் குருமாரும் மக்களுக்காக மாறிமாறிப் பாட்டினைப் பல்லவியாகப் பாடுவதற்கமைந்த வேண்டுகோள் பாசுரத்தொகுதி.
litany-desk, litany-stool
n. வழிபாட்டுமேடை முழங்காற்படி.
litchi
n. சீனப் பழமர வகை, சீனப் பழவகை.
literacy
a. இலக்கியஞ் சார்ந்த, இலக்கியப் பண்புடைய, மொழி வகையில் நடைநயம் வாய்ந்த, இலக்கிய வடிவமைதி வாய்ந்த, இலக்கியப்புலமை வாய்ந்த, இலக்கிய ஈடுபாடுள்ள, இலக்கியத்தொடர்பான, இலக்கிய ஏடுகள் சார்ந்த, இலக்கிய வழக்கான, எழுத்து வழக்கான, எழுத்தாளர் கையாட்சிக்குரிய, இலக்கியம் படைக்கிற, எழுத்தாண்மை சார்பான, பேச்சுவழக்கிற் படாத, எழுத்துநடை சார்ந்த.
literae humaniores
n. (ல.) பண்பாட்டிலக்கியம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிரேக்க லத்தீன் இலக்கியப் பயிற்சிப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கலை இளவல் தேர்வின் கிரேக்க லத்தீன் பிரிவு.
literal
n. அச்சு அல்லது தட்டச்சில் எழுத்துப் பிழை, (பெ.) எழுத்துச் சார்ந்த, எழுத்தியல்பான, எழுத்தைப் பின்பற்றிய, சொல்லுக்குச்சொல் சரியான, சொல்லின் நேர்ப்பொருள் சார்ந்த, சொல்லின் மூலமுதற் பொருள் சார்ந்த, உவம உருவகச் சார்பற்ற, வெளிப்படைப் பொருள் சார்ந்த, உயர்வு நவிற்சியற்ற, நேருண்மையான.
literalize
v. உருவக முதலிய அணிவழக்குகளைச் சொல்லின் நேர்ப்பொருளிலேயே கொள், நேர்ச்சொற்பொருட்படுத்து.