English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
linen-fold
n. நார்மடிச் சுருள் போன்று செதுக்கப்பட்ட அணிகலன்.
liner
-1 n. பீரங்கி-இயந்திரம் ஆகியவற்றில் சுழற்றக்கூடிய உள்வரி உலோகக் காப்புறை.
lines
n. pl. பாடல், நடிப்புப் பகுதி, ஊழ்வாய்ப்புக்கூறு, ஊழ்வகுப்பு, உருவரைக் கோடு, குடிசை வரிசை, அரண்வரிசை, திருமணச் சான்றிதழ், கப்பல் முதலியவற்றின் வகையில் கட்டமான அமைப்புதிட்டம்.
linesman
n. நிலைப்படைப் பிரிவின் வீரன், பந்தாட்ட நடுவரின் துணைச்சான்றாளர்.
ling
-1 n. பதன உணவாகப் பயன்படுத்தப்படும் நீண்ட மெல்லிய வட ஐரோப்பியக் கடல்மீன் வகை.
linga, lingam
(ச.) இலிங்கம்.
linger
v. தயங்கி நில், சுணங்கு, சுற்றி வட்டமிட்டுத் தயங்கு, நேரந்தாழ்த்திக்கொண்டிரு, புறப்படாமல் காலங்கடத்து, நோய்வகையில் போகாது நீடித்திரு, சாவாது நீடி, அரை உயிராய்த் காலங்கழி.
lingerie
n. (பிர.) நார்மடித்துணிமணி, நார்மடித்துணி மணிச் சேமத்தொகுதி, பெண்களின் உள்ளுடைத் தொகுதி.
lingo
n. புரியா அயல்மொழி, குழு வழக்கு மொழி, தனிவழக்கு மொழி, இடையீட்டுப் பொது மொழி, இடையீட்டுப் பொதுக்கருத்துப் பண்பு.
lingual
n. ட,ண போன்ற நாவிடைப் பிறக்கும் ஒலி, (பெ.) (உள்) நாவமினைச் சார்ந்த, ஒலிமுறை நுல்வகையில் நாவினால் உருவாகின்ற, பேச்சுக்குரிய, மாழிசார்ந்த.
linguiform
a. (தாவ., உள., வில.) நா வடிவுடைய.
linguist
n. அயல்மொழி வல்லார், பன்மொழியறிஞர்.
linguistic
a. மொழி நுலாராய்ச்சி சார்ந்த, மொழி சார்ந்த வகை.
linguistics
n. pl. மொழியியல்.
lingulate
a. நா வடிவுள்ள.
linguodental
a. நாப்பல் ஒலிப்புடைய.
linhay
n. பண்ணையின் திறந்த முகப்புக்கொட்டகை.
liniment
n. தேய்ப்புத் தைலம் முதலிய நீக்காத நோய் க்குரிய பூச்சுத்தைல மருந்து.
lining
n. உள்வரிப் பூச்சு,உள்வரித் துணி, அணைசிலை, அக உறை.
link
-1 n. கண்ணி, சங்கிலியின் தனி வளையம், கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு, தொடர் கோவையின் தனி உறுப்பு, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு, (வினை) கொக்கியால் பொருத்து, இடையில் சோத்திணை, ஒன்று சேர், ஒட்டவை, கைகளைக்கோத்துக் கொள், பற்றிப்பிடி, பிணை.