line
-1 n. வரை, கோடு, வரம்பு, எல்லைக்கோடு, வரிசை, படை அளிநிரை, அகழி, மடிப்புவரை, அடையாளக் கோடு, திரைப்பு, சுரிப்பு வரி, முகத்தோற்றம், ஒளிக்கீற்று, கீற்று வரி, ஏட்டின் வரி, பாவின் அடி, செய்யுள், சுருக்கக் குறிப்பு, சிறுகடிதம், வாணிகக் கட்டளை, கட்டளைச் சரக்கு, நுல், இழை, கயிறு, கயிற்றுத் துண்டு, ஆழம் பார்க்கும் குண்டுநுல், அளவு இழைக்கச்சை, தூண்டில், துணி தொங்கவிடும் கொடிக்கயிறு, வழிகாட்டும் கயிறு, வழியறிவிப்புக் கோடு, கம்பி, தந்திக்கம்பி, கம்பிவடம், தந்திப்பாதை, வழி, போக்கு, திசை, நடைமுறை, நெறி, ஒழுங்கு, ஒழுங்குமுறை, விதி, படித்தரம், தொகுப்பு, கோப்புத் தொகுதி, கோவை, தொடர், குடும்பக் கால்வழி, மரபு, வழிமரவு, மரபு வரிசை, துறை,கூறு, தொழில் முறை, வாணிகத்துறைச் சரக்கு, வாழ்க்கைத் துறை, விருப்பத் துறை, ஆற்றல் பாங்கு, கைவரை, அங்குலத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான நுண்ணளவை, நுண்கூறலகு, தொலைக்காட்சியில் பக்கவாட்டில் கீற்று கீற்றாக எடுக்கும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று, (வினை) கோடிடு, வரிவரியாயிரு, வரியிட்டு, நிரப்பு, வரியிட்டுக் குறி, கோடிட்டு அடி, வரிசைப்படுத்து, வரிசைப்படு, வரிசையாக உருவாக்கு, வரியாக உருவாகு, படைக்காவல் வை, காவல்நிலைகளில் நிறுத்து, வரிசையில் நில், சம எடையில் நில், ஒழுங்கு முறையில் அமைந்திரு, பாடலை அடியடியாகப் படும்படி வழங்கு.