English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
libretto
n. இசைநாடகச் சுவடி, இசை நாடக முதலியவற்றிற்குரிய வாசககங்கள்.
Libyan
n. ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள பண்டைய லிபியா பகுதியினர், (செய்.) ஆப்பிரிக்கர், ஆப்பிதிக்காவின் பெர்பெர் மொழி, (பெ.) பண்டைய லிவியாவினைச் சார்ந்த, (செய்.) ஆப்பிரிக்காவைச் சார்ந்த, பெர்பெர் மொழியைச்சார்ந்த.
licence
-1 n. விடை, இசைவு, இணக்கம், திருமண இசை வாணை, மேடைப் பேச்சு இசைவுக் கட்டளை, அச்சடித்தல் இணக்க முறி, வெளிப்பொருள் வாணிக இணக்க ஆணை, பல்கலைக்கழகம் வழங்கும் கலைத்துறைத் தகுதிச் சான்றிதழ், தன்னிச்சை, விருப்பாண்மை, தவறான உரிமை வழங்கீடு, சட்ட ஒதுக்கீடு, ஒழுங்குப் புறக்கணிப்பு, எழுத்தாளர் இலக்கண் ஒழுங்குப் புறக்கணிப்பு, கவிஞர் சந்த உரிமைச் சலுகை.
licence(2), license
v. இசைவளி, முழு உரிமை கொடு, வழங்கும் உரிமை கொடு, பயன்படுத்தும் உரிமை வழங்கு, குறிப்பிட்ட காரியத்துக்காக மனையிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரமளி, வெளியிட இணக்கமளி, நாடகம் நடத்த அனுமதி கொடு.
licensed
a. உரிமைபெற்றுள்ள, முழு உரிமை அளிக்கப்பெற்றுள்ள.
licensee
n. உரிமை வழங்கப் பெற்றவர்.
licenser
n. தனியுரிமை வழங்குபவர், இசைவிணக்கம் கொடுப்பவர், இணக்க ஆணை வழங்க அதிகாரம் பெற்றவர்.
licentiate
n. பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் பெற்றிருப்பவர், கல்லாரி அல்லது தேர்வுத் தலைவர் சான்றிதழ் பெற்றவர், திருச்சபை வகையில் சமயச் சொற்பொழிவாற்ற இசைவுரிமை பெற்றிருப்பவர்.
licentious
a. கட்டுப்பாடுகளுக்கு உட்படாத, இலக்கண விதிகளை மீறிய, மிகு சிற்றின்பப் பற்றுள்ள, இழிவான.
licentiousness
n. இழிகாமம், தூர்த்தத்தன்மை.
lich-house
n. பிணமனை, சாவுக்கிடங்கு.
lich-ow
n. சாக்குறியெனக் கருதப்படும் கிறீச் சொலியுடைய ஆந்தை வகை.
lichen
n. மரப்பாசி, கற்பாசி, சிவப்புப் பருக்களுடன் கூடிய தோல் நோய் வகை.
lichgate
n. பிணப்பெட்டியை வைத்திருப்பதற்கான திருக்கோயில் முற்றத்தின் வாயிற்படிநிலை.
lichstone
n. திருக்கோயில் வாயிற்படியில் பிணப்பெட்டியை வைப்பதற்கான கற்பீடம்.
licit
a. கள்ளத்தனமானதாயிராத, முறையான.
lick
n. நக்குதல், நாவினால் துழாவுதல், விலங்குகள் உப்பினை நக்குமிடம், சுரீரென்ற அடி, நாக்கு உறிஞ்சிய அளவு, மேலீடான பூச்சு, (வினை) நக்கு, சுவைக்காக நாவினைத் துழாவு, நக்கி ஈரமாக்கு, நக்கித் துப்புரவு செய், நக்கிக்குடி, உறிஞ்சு, துடை, அலைகள்-தீநா முதலியவை வகையில் மேலே லேசாகத் தொட்டுக்கொண்டு செல், தீநா வகையில் ஊர்ந்துசென்று விழுங்கிவிடு, சண்டையில் அல்லது போட்டியில் தோல்வி உறச் செய், விஞ்சு.
lickerish
a. நற்சுவைப்பொருள் நாடுகிற, சுவையான உணவில் விருப்பமுள்ள, பேராசையுள்ள, அங்கலாய்ப்பான, கயமைத்தனமுள்ள.
lickspittle
n. அண்டிப்பிழைப்பவர், இச்சகம்பேசி வாழ்பவர்.