English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lias
n. நீலச் சுண்ணாம்புக்கல் பாறை வகை.
libation.
தெய்வத்துக்குப் படைக்கப்படும் பானம்.
libel
n. எழுத்துமூலமான குற்றத்தாக்கு, (சட்.) அவமதிப்பறிவிப்பு, நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு, நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வெளியீடு, (பே-வ.) அவதூறு, புரளி, பொய்யான இகழுரை, மித்ப்புக்கேடு, மதிப்புக் கெடுப்பதற்குக் காரணமாயிருக்கும் வழு. (வினை) தாக்கறிவிப்பினால் புகழ்கெடு, அவதூறு செய், பொய்யான வசைத்தாக்குதல் செய், பொய்யாகக் குற்றஞ்சாட்டு, (சட்.) அவமதிப்பான அறிவிப்பு வெளியிடு, (சட்.) எழுத்துமூலம் அறிவிப்புச்செய்து எதிர் நடவடிக்கை எடு.
libeller, libellist
அவதூறாக எழுதுபவர்.
libellous
a. எழுத்துமுலந் தாக்குகிற, அவதூறான.
Liberal
-1 n. முற்போக்குக் கட்சி உறுப்பினர், பிரிட்டிஷ் முற்கோக்குக் கட்சியினர்.
liberality
n. வள்ளன்மை, விரிந்த மனப்பான்மை, பெருந்தகைமை, பெரும்போக்கு.
liberate
v. விடுவி, தளைநீக்கு, விடுதலை செய், (வேதி.) கலவையிலிருந்து பிரித்து வெளியேற்று.
liberation
n. விடுதலை, விடுவிப்பு, தலைநீக்கம்.
libertarian
n. ஊழ்க்கோட்பாட்டை எதிர்ப்பவர், தன்விருப்பார்ந்த வினையாட்சிக் கோட்பாட்டாளர், விடுதலைஆதரவுக் கோட்பாட்டாளர், (பெ.) தன்விருப்பார்ந்த வினையாட்சிக்கோட்பாடுடைய.
liberticide
n. விடுதலை உரிமை அழிப்பவர், (பெ.) விடுதலை உரிமையை அழிக்கிற.
liberties
n. pl. நீண்டகால மரபுரிமைகள், மரபாட்சி உரிமைத்திறங்கள், வழிவழி அனுபவச் சலுகைகள், பட்டய உரிமைகள், உரிமைப் பேறுகள்.
libertine
n. மெய்த்துறையில் கட்டற்ற சிந்தனை உரிமையாளர், மனம்போன போக்காளர், காமுகன், (பெ.) கட்டற்ற, ஒழுக்கவரம்பற்ற
liberty
n. விடுதலை, விடுதலையுரிமை, தன்னாட்சியுரிமை, ஆட்சித் தனியுரிமை, கொடுங்கோன்மையின் தாமக்கற்ற உரிமை, கொடுங்கோன்மையிலிருந்து பெற்ற அரும்பெறல் உரிமை, உரிமைத்திறம், தங்குதடையற்ற தன்னுரிமை, அடிமைத்தமளை நீக்கம், தனியுரிமை, தன்செயலுரிமை, தன்விருப்பாற்றலுரிமை, (மெய்.) ஊழின் தளையற்ற தன் வினையாற்றல், விதிகளின் கட்டுப்பாடற்ற தன்னுரிமையாற்றல், சிறப்புரிமை, தடையற்ற நிலை, உரிமையாற்றல் எல்லை, விருப்புரிமைஎல்லை, தன்னுரிமைக்கான இசைவு, இசைவுரிமை, சலுகை, விலக்குரிமை, உரிமைச் சலுகை, விதி மீறுகை, தகா உரிமை, ஈடுபாடின்மை, வாய்ப்போய்வு.
libidinous
a. சிற்றின்ப உணர்ச்சிகொண்ட.
libido
n. (உள.) உணர்ச்சியின் உந்துதல், பாலுணர்ச்சியின் உந்துதல்.
Libra
-1 n. (வான்.) துலா ராசி.
librarian
n. நுலகர், ஏடகக்காப்பாளர், புத்தகசாலையின் பொறுப்பு வாய்ந்த அலுவலர்.
library
n. நுல் நிலையம், ஏடகம், பொதுமக்கள் பயன்படுத்துவதற்குரிய புத்தகசாலை, வீட்டிற் படிக்க எழுதப்பயன்படுத்தப்படும் அறை, பொதுமக்களுக்கான புத்தகத்தொகுதி, தனித் துறையினருக்கான நுலகம், உறுப்பினர்களுக்கான புத்தகக்கூடம், தனி மனிதர் ஏட்டுத்தொகுதி,வெளியீட்டாளர் ஒரே கோப்பாக வெளிவிடுந் தொகுதி, ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி, ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி, ஏட்டாசிரியருக்குப் பழக்கமான புத்தகத்தொகுதி.
librate
v. ஊசலாடு, அலையாடு, சமநிலைகொள், சமப்படுத்தப்பெறு, நடுங்கு, துடி.