English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
levator, levator-muscle
n. உறுப்பினை உயர்த்தும் தசை, தூக்குவிசைத் தசை.
levee
-1 n. நாளோலக்கம், காலைக் கூட்டணி வரவேற்பு, திருவோலக்கம், அரசுரிமைக் கூட்டணிக் காட்சி, ஆடவர் பேட்டிகுழு.
levee, levee
-2 n. ஆற்றின் வெள்ளக் காப்புக்குரிய அணை கரை.
level
n. சரிமட்டம், சமதளம், தளமட்டம், மட்டம் பார்க்கும்கருவி, தன்மட்டம், சமதளநிலை, படித்தளம், உயர்வுப்படிநிலை, சமுதாயப் படிநிலை, ஒழுக்கப் படிநிலை, அறிவுப்படி நிலை, சமதளப் பரப்பு, சமதளப் பரப்பான நாட்டுப்பகுதி, (பெ.) நிரப்பான, கிடைமட்டமான, நிலம்படிந்த, நுல்குண்டுக்குச் செவ்வான, ஒத்த உயரமுடைய, ஒப்பான, ஒருநிலைப் பட்ட, சமநிலையான, சரிசமமான, உயர்வுதாழ்வற்ற, ஒரேதரமான, ஒரே பாணியிலமைந்த, ஒத்த தருண்முடைய, (வினை) சமதளப் படுத்து, ஒரநிலைப்படுத்து, ஒரேமட்டமாக்கு, உயர்வுதாழ்வகற்று, நிலமட்டமாக்கு, தாக்கிவீழ்த்து, இலக்குக் குறிவை, நோக்கி நீட்டு, குறியாகக் கொண்டு வசையால் தாக்கு.
level-headed
n. உணர்ச்சி வயப்படாத, உலகியல் அறிவமைதி வாய்ந்த.
leveller
n. சமப்படுத்துபவர், சமப்படுத்துவது, சமுதாய வேறுபாடுகளை ஒழிக்க விரும்புபவர், சமத்துவ வாதி.
levelling-screw
n. சரிமட்டத் திருகாணி, இயந்திரத்தின் பகுதிகளை மயிரிழைகூடப் பிசகாது தளமட்டத்திற்கு ஒழுங்கு படுத்தும் மரையாணி.
lever
n. நெம்புகோல், துப்பாக்கிக் குழலைத்திறக்கும் விசைக்கோல், (வினை) நெம்புகோலினால் உயர்த்து, நெம்புகோலைப்பயன்படுத்து, நெம்புகோலை இயக்குவி.
leverage
n. நெம்புகோலியக்கம், நெம்புகோலின் கையாட்சி, நெம்புகோல் அமைப்பு, நெம்புகோல் தொகுதி, நெம்புகோலைப் பயன்படுத்துவதனால் கிடைக்கும் ஆற்றலாதாயம், நிறை வேற்றும் சாதனம், கருவியாற்றல், ஆற்றல் செல்வாக்கு, துணைவலு.
leviathan,
பெருங்கடல் விலங்கு, அருவருப்பான பேருரு, இனத்தின் மிகப்பேருரு, மாபெருங் கப்பல், பேராற்றல் சான்றவர், மாபெருஞ் செல்வர்.
levigate
v. மென்தூளாக்கு, மைப்பொடியாக்கு, மென்குழம் பாக்கு.
levin
n. (செய்.) மின்னல், மின்வெட்டொளி.
levirate
n. யூதர் முதலியோரிடையேவழங்கியபடி மாண்டவன் மனைவியை அவன் உடன்பிறந்தான் அல்லது அணுக்க உறவுடையோன் மணந்துகொள்ளும் வழக்காற்று முறை.
levitate
v. யோக ஆற்றல் மூலம் காற்றில் அந்தரமாக எழச்செய், வாயுத்தம்பளம் செய்து உயர்த்தெழு.
Levite
n. திருக்கோயில் குருமார் துணைவராகச் செயலாற்றிய யூத இன வகுப்பினர், யூத இனக் கிளைமரபு வகையினர்.
Levitical
n. யூத இனக் கிளைமரபு வகை சார்ந்த, திருக்கோயிற் குருமார் துணையான கிளை மரபுக்குழுச் சார்ந்த, யூத இன கிளைமரபினர் விளைமுறைக்குரிய, விவிலிய ஏட்டின் முதல் ஐம்பிரிவுகளுள் மூன்றாம் பிரிவுக்குரிய.
levity
n. பளுவின்மை, கருத்தின்மை, கவலையின்மை, கட்டற்ற வாழ்வு, ஒழுக்கத்தளர்வு, பொறுப்பேற்ற போக்கு, தீயொழுக்கம், புல்லறிவு, விளையாட்டுத்தனம்.
levy
n. வரிவிதிப்பு, வரிப்பிரிப்பு, வரித்திரட்டு, படைத்திரட்டு, படைக்கு ஆள் திரட்டு, பிரித்த வரித்தொகை,திரட்டிய படை வீரர் தொகுதி, (வினை) வரிவிதி, சுங்கம் விதி, வரி திரட்டு, பணம் தண்டு, சட்ட நடைமுறை நிறைவேற்ற மூலம் சரக்கு மீது பணம் பிரி, கொள்ளை தவரி கைப்பற்று, அச்சுறுத்துப் பணம் பறி, படைக்கு ஆள்சேர், படைக்கு ஆள்திரட்டு, பொருக்கான படைதிரட்டு, போர்ச்சாதனங்கள் திரட்டு.
lewd
a. காமவெறிபிடித்த, ஓழுக்கங்கெட்ட, இழிந்த கீழ்த்தரமான, சுவையற்ற, தூய்மையற்ற, மரியாதையற்ற.