English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lewis
n. கனமான கற்களைப் பற்றித்தூக்குவதற்கான இரும்புப் பொறியமைப்பு, நற்கொத்தர் சங்க உறுப்பினரின் புதல்வர்.
lewisgun
n. பளுக்குறைந்த இயந்திரத் துப்பாக்கி வகை.
lewisite
n. கொப்புள வளி, இராசயனப் போர்முறையில் பயன்படுத்தப்படும் கொப்புளம் உண்டாகும் நச்சு வளி.
lex talionis
n. (ல.) பழிக் கெதிர்ப்பழிச் சட்டமுறை.
lexical
a. மொழியின் சொற்கள் பற்றிய, சொற்களஞ்சியம் சார்ந்த, அகரவரிசை ஏடு குறித்த.
lexicographer
n. சொற்களஞ்சிய ஆசிரியர், நிகண்டு ஆசிரியர்.
lexicography
n. சொற்களஞ்சியக்கலை.
lexicon
n. சொற்களஞ்சியம், அகராதி.
lexigraphy
n. சொற்குறியீட்டடெழுத்து முறை, ஒவ்வொரு வரிவடிவக் குறியிடும் ஒரு சொல்லைக் குறிப்பிடுமாறு எழுதும் முறை.
ley
n. பருவப் புல்நிறம், சிறிதுகாலம் புல்விளையும் நிலம்.
Leyden battery
n. மின்கல அடுக்கு.
li
n. சீனத் தொலைவலகு, ஏறத்தாழ 633 கெசத் தொலைவு, ஏற்த்தாழ ஐந்தில் முன்று பங்கு குன்றிமணியுள்ள சீன எடை வகை.
liabilities
n. pl. கடன் பொறுப்புக்கள், செலுத்த வேண்டிய கடன் தொகைகள்.
liability
n. சட்டக் கடப்பாடு, பிணைப்பாடு, பொறுப்புடைமை, உத்தரவாதம், கடன்பாடு, கடன் கொடுக்க வேண்டிய பொறப்பு, கடப்பாட்டுக்குரிய செய்தி, கடன்.
liable
a. சட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட, உத்தரவாத முடைய, சட்டப் பிணைப்புக்குரிய, வரி-தண்டனை முதலியவற்றின் விதிப்புக்குக் கடமைப்பட்ட, ஆட்படத்தக்க நிலையில் உள்ள, வருநிலையில் உள்ள, நிகழ் நிலையில் உள்ள.
liaise
v. தொடர்பு கொள், உறவு கொண்டிரு.
liaison
n. பிணைப்பு, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட கரவொழுக்கம், கள்ளப்புணர்ச்சி, பிரஞ்சு மொழியில் நிலைமொழி ஈற்று மெய்யின் மீது வருமொழி முதலரில் வரும் உயிர் ஏறி ஒலித்தல்.
liana, liane
முறுக்கிக் தவழந்து படரும வெப்ப மண்டலக் காட்டுக் கொடிவகை.
liar
n. பொய்யர், வழகக்மாகப் பொய் பேசுபவர்,