English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
life-guard
n. மெய்க்காப்பாளர்.
life-jacket
n. நீரில் ஆழாமல் மிதக்க வைக்கும் சட்டை அமைவு.
life-office
n. உயிர்க்காப்பீட்டு அலுவலகம்.
life-preserver
n. நீரில் மூழ்காமல் காக்கும் அமைவு, முனையில் பெருஞ்சுமை பொருத்தப்பட்டுள்ள குறுந்தடி.
life-size
n. இயற்கை வடிவளவு, (பெ.) இயற்கை வடிவளவினதான.
life-spring
n. உயிரூற்று.
life-strings
n. உயிர்நாடி, உயிரோடிருப்பதற்கு இன்றியமையாததெனக் கருதப்படும் நரம்பு, உயிர் வாழ்வதற்கு மூலாதாரம்.
life-table
n. வாழ்க்கை வாய்ப்புவள அட்டவணை, மனிதர்கள் வாழ்க்கூடிய, சராசரி வயதுகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் காட்டும் அட்டவனை.
life-work
n. வாழ்நாட் பணி, வாழ்நாளில் செய்ய ஒருவர் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பணி.
lifebelt
n. மிதவைக் கச்சை,இடர்காலத்தில் கடலில் நீந்தி மிதக்க உதவும் மிதவைப்பொருளாலான அரைக்கச்சை.
lifebuoy
n. மிதப்புக் காப்பமைவு, காப்பாற்றப்படுகிறவரை ஆளை நீரில் மிதக்க வைக்கும் அமைவு.
lifeless
a. உயிரற்ற, செத்த, உணர்ச்சியற்ற, மரத்துப் போன, ஊக்கமிழந்த, கவர்ச்சியற்ற, சப்பையான.
lifelike
a. உயிரோட்டமுடைய, உயிர்க்களைதயுள்ள, மூலத்தையொத்த, மூலத்தின் உயிர்ப்பண்பை அப்படியே எடுத்துக்காட்டுகிற.
lifeline
n. உயிர்ப்பாதை, உயிர்போன்ற முக்கியத்துவம் உடைய போக்குவரவு நெறி, உயிர்க்காப்பதற்காக வென்று மிதவைப் பொருளுடன் கட்டப்பட்டுள்ள கயிறு, நீர்முழ்கி சைகை காட்டுவதற்குப் பயன்படுத்தும் கயிறு, கைவரை நுல் வகையில் ஆயுள்வரை.
lifelong
a. வாழ்நாள் முழுதும் நீடித்திருக்கிற, நீடித்த காலப் பழக்கமுடைய.
lifetime
n. ஆயுட்காலம், வாழ்நாள், உயிரோடிருக்கும் காலம், வாழுங்காலம்.
liffe-sized
a. இயற்கை வடிவளவினதான.
lift
n. தூக்குதல், மேல் நோக்கி உயர்த்துதல், மேலே எழுப்புதல், தூக்காற்றல், தூக்கும் செவ்வுயரம், தூக்கும் கருவி, பாரந்தூக்கி, இயங்கேணி, தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி, இயங்கேணிக்குரிய புழைக்கூடு, விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு, உயர்வு, பதவிமேம்பாட்டுப் படி, மேலாக்கப்படி, உயர்வுதவி, மேம்பாட்டாதரவு, உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி, (வினை) தூக்கு, உயர்த்து, தாங்கியெட, மேல்தளத்துக்குக் கொண்டுசெல், எடுத்துக் கொண்டுசெல், திருடி எடுத்துச்செல், ஆனிரை சுவர், தூக்கி நிமிர்த்து, எடுத்து நிற்கவை, உயர்வுடையதாகக் கொள், உயர்த்தப் பெறு, வீங்கு, புடை, எழு, அலையில் மிதந்தெழு, மகிழ்வூட்டு, அகற்று, அகல், விலகு, பந்தினை மேல்நோக்கி எறி, உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.
lifteboat
n. உயிர்க்காப்புப்படகு, இடரில் உதவும் படகு.
ligament
n. (உள்.) விசி, எலும்புகளைப் பிணைக்கும் திசை நார், உறுப்புக்களைப் பற்றிப்பிடிக்கும் நரம்பு.