English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lightning-conductor, lightning-rod
n. சூலிகை, இடி தாங்கி.
lights
-1 n. pl. விளக்கக் கூறுகள், கண்டுபிடிப்புகள், அறிவுத்திறங்கள்.
lightship
n. விளக்குக்கப்பல், அவிரொளிகள் தாங்கிக் கலங்கரை விளக்கமாகப் பயன்படும் கப்பல்.
lightsome
a. மலர்ந்த தோற்றமுடைய, கவலையற்ற, களிப்பான, விரைவியக்கமுடைய.
lightweight
n. சராசரி எடைக்குக் குறைவான எடையுள்ள மனிதர் அல்லது விலங்கு, குத்துச்சண்டைத் துறையில் 126 கல்லெடைக்கும் 135 கல்லெடைக்கும் இடைப்பட்ட கனமுடையவர், (பெ.) சராசரி எடைக்குக் குறைந்த எடையுள்ள.
lightwood
n. ஒளிர் கொழுந்து விட்டெரியும் இலேசான கட்டையுடைய மரவகை.
lignaloes
n. கரியபோளம், கற்றாழை வகையிலிருந்து பெறப்படும் மருத்துச் சரக்கு, மெக்சிகோ நாட்டுக்கற்றாழை வகையில் நறுமணக் கட்டை.
ligneous
a. அகக்காழான, செடியினத்தின் வகையில் உட்கட்டைப் பகுதியினையுடைய.
ligniferous
a. மரவகையில் உட்கட்டைப்பகுதி விளைவிக்கிற.
ligniform
a. மரத்தின் உட்கட்டை வடிவான.
lignify
v. மரத்தில் உட்கட்டையாக்க.
lignite
n. பழுப்பு நிலக்கரி, மர உட்கட்டை அமைப்பினை உடைய பழுப்பு நிறமான நிலக்கரி வகை.
lignum vitae
n. மேற்கிந்தியத்தீவுகளின் புதர்ச்செடி வகைகளின் கட்டை.
ligulate
a. (தாவ.) நாக்கு வடிவமான, இழைக்கச்சை யுருவான, சிலிர்களையுடைய.
like
-1 n. சரிநேர்ப்பொருள், சரிநேர் ஆள், குழிப்பந்தாட்ட வகையில் ஒவ்வொரு கட்சியினரும் ஆடிய வீச்சுக்களின் எண்ணிக்கையைச் சமப்படுத்தும் வீச்சு, ஒத்த வகைப்பொருள், ஒத்தவகைப் பொருள்கள், (பெ.) ஒத்தமாதிரியான, போலிருக்கிற, ஒத்த இயல்புடைய, மூலத்தையொத்த, ஒன்றையொன்று ஒத்திருக்கிற, (கண.) ஒத்த ஓரினமான, ஒரே வகையைச் சேர்ந்த, தனிச்சிறபியல்புக் கொத்த, தனிப்பண்பாயிருக்கிற, நம்பிக்கையூட்டும் நிலையிருக்கிற, வாய்ப்பான நிலையிலுள்ள.
like-minded
a. ஒத்தநோக்கம் உடைய, ஒத்த சுவையுணர்ச்சி உடைய.
likelihood
n. நிகழ்வியல்வு, ஒன்று நிகழ்வதற்கான சாத்தியக்கூறு, நிகழத்தக்கநிலை.
likely
a. பெரும்பாலும் நேரக்கூடிய, நிகழும் சாத்தியக்கூறுடைய, உண்மையாயிருக்கக் கூடிய, ஆயிருக்கக்கூடிய, எதிர்பார்க்கப்படுகிற, பொருத்தமானது போல் தோன்றுகிற, செய்யத்தக்கவர்போல் தோன்றுகிற, (வினையடை) பெரும்பாலும் நிகழும் சாத்தியக்கூறுடையதாக, நம்பக்கூடியதாக.
liken
v. ஒப்பிடு, ஒப்பிட்டுக்கூறு, ஒப்புடையதாகக் காட்டு.