English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
huff
n. கோபநிலை, வெடுவெடுப்பு, (சதுரங்க ஆட்டத்தில்) ஆட்ட உரிமை இழந்துவிட்டதாக எதிரியின் ஆளை ஆட்டத்தினின்று விலக்குதல், (வி.) கொடுமைப்படுத்து, அடக்கியாளு, சீறு, தாக்கு, சினமுறச் செய், வெறுப்புறச் செய், கோபப்படு, (சதுரங்க ஆட்டத்தில்) ஆட்ட உரிமை இழந்துவிட்டதாக எதிரியின் ஆளை ஆட்டத்தினின்று விலக்கு.
huffish, huffy
கோபிக்கிற, வெடுவெடுக்கிற, சீறுகிற, சிடுசிடுப்பான, எதையும் குற்றமாக எடுத்துக் கொள்கிற.
hug
n. அணைப்பு, இறுகத் தழுவுதல், மற்போரில் பிடிவகை, (வி.) அன்போடு இறுகத்தழுவு, ஆர்வத்தோடு அணை, கட்டித் தழுவு, கரடி வகையில் முன்னங்கால்களுக்கிடையே வைத்து அமுக்கு, மனத்தில் பற்றிப் பிடித்துக்கொள், அன்பாதரவை வெளிக்காட்டு, வாழ்த்துக்கூறு, கரையோரமாயிரு.
hug-me-tight
n. உடம்போடு ஒட்டிய கம்பளி ஆடைவகை.
huge
a. மிகப் பெரிய, மாபேரளவான, மிகச்சிறந்த.
hugely
adv. மிகப்பேரளவில்.
hugeous
a. (பே-வ.) மிகப்பெரிய.
hugger-mugger
n. இரகசியம், மர்மம், ஒளிவு மறைவு, குழப்பம், (பெ.) இரகசியமான, ஒளிவு மறைவான, குழப்பான, (வி.) மறை, குழப்பு, வெளியாகாது அடக்கு, மறைவாகச் செய், அடக்கமாக முன்னேறு, (வினையடை) குழப்பத்தில், இரகசியமாக, ஒளிவு மறைவாக.
huggery
n. ஆதரவு நாடிய பசப்பு, வழக்குரைஞர் முதலியோர் வகையில் தொழில் வாடிக்கை நாடிப் பசப்பி வசப்படுத்தும் முயற்சி.
huguenot
n. (வர.) கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்த முனைத்த சீர்திருத்தக் கிறித்தவமதக் கொள்கையுடைய பிரஞ்சுக்காரர்.
hula
n. ஹவாய் நாட்டுப் பெண்ணின் நடனம்.
hulk
n. கரையோரச் சரக்குக் கிடங்காய்ப் பயன்படுத்தப்படும் உடைந்த கப்பலின் உடற்பகுதி, எளிதில் கையாள முடியாத பளுவான கப்பல், மிகத் தடித்த மனிதர், பருமனான பொருள்.
hulking
a. பருமனான, அருவருப்பான.
hulks
n. pl. சிறைக்கூடமாகப் பயன்படும் உடைந்த கப்பலின் உடற்பகுதி.
hull
-1 n. உமி, தோடு, காய் கூல வகைகளின் மேல்தோல், மூடி, மேலுறை, (வி.) மேல் தோல் நீக்கு, உமி நீக்கு.
hullabaloo
n. குழப்பம், அமளி, ஆரவாரப் பேரொலி, கூச்சல்.
hullo, hulloa
வியப்பொலி, கவனத்தை ஈர்க்கும் குறிப்பொலி, தொலைபேசியில் அழைப்பிற்குரிய பதிலொலி.
hully
a. உமி உடைய, மேற்றொலுடைய.
hum
n. முரல் ஒலி, முனங்கொலி, மந்த ஓசை, (வி.) முரலு, தாழ்ந்த குரலில் பாடு, மந்த ஓசையில் வாய்திறவாது பாடு, முனங்கு, தயக்கத்தைக் காட்ட மெல்லிய குரலில் புரியாதபடி கூறு.
huma
n. ஓய்வின்றித் திரிவதாகக் கதைகளில் கூறப்படும் பறவை.