English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
humility
n. பணிவு, தாழ்வுணர்ச்சி, அடக்கம், அமைவு, அமரிக்கை, தாழ்ந்த நிலை.
hummer
n. வாய்திறவாது மென்மையாகப் பாடலை முனகுபவர், முனகல் ஓசை எழுப்புபவர், முரலும் வண்டு, மந்த ஓசையெழுப்பும் பறவை.
humming
a. முரலுகிற, முனகுகிற, வாய்க்குள்ளாகப் பாடுகிற, (பே-வ.) ஊக்கமான, கிளர்ச்சிமிக்க.
humming-bird
n. சிறகடிப்பதன்மூலம் பொம்மெனும் ஒலி எழுப்புகின்ற சிறு பறவை வகை.
humming-top
n. சுழலும்போது பொம்மெனும் முரல்வோசை எழுப்பும் பம்பர வகை.
hummock
n. சிறு குன்று, மேடு, திடர், தேரி, சதுப்பு நிலத்தில் உயர்ந்து செல்லும் நிலம், பனிக்கட்டிப்பரப்பில் இடைகரை, பனிக்கட்டிக் குவியல்.
humoral
a. (மரு.) உடம்பின் தாதுக்களைச் சார்ந்த.
humoralism
n. உடலில் நீர்க்கசிவுப் பொருள்களுள்ள நிலை, உடலின் நீரியல் தாதுக்களின் நிலை சார்ந்ததே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாடு.
humoralist
n. உடலின் நீரியல் தாதுப்பொருள்களின் நிலைகளினாலேயே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாட்டை ஆதரிப்பவர்.
humorist
n. நகைத்திறமுடையோன், நகைச்சுவையுணர்வுடையவர், நகைத்திறப் பேச்சாளர், நகைத்திற எழுத்தாளர், நகைத்திற நடிகர், நகைத்திறமூட்டும் பேச்சு நடையாளர், தனித்திறப் போக்குடையவர், மக்கள் போக்குகளில் ஈடுபட்டு ஆய்பவர்.
humorous
a. நகைத்திறத்தால் தூண்டப்பட்ட, நகையாடி மகிழ்வுறுவதற்குரிய, நகைத்திறம் நிரம்பிய, சிரிப்பூட்டுகின்ற, கேலிக்குரிய, தனிப்போக்கான, மனம்போன போக்கான, ஏறுமாறான.
humour
n. நகைச்சுவை, நகைச்சுவை காணும் திறன், நகை ஏளனத்திறன், ஈரம், நீர்க்கசிவு, நீர்ப்பொருள், தாது, உயிரின உடற் கசிவுப்பொருள், விருப்புவெறுப்புக் கூறு, வேடிக்கைக்கற்பனை, விளையாட்டான புனைவாற்றல், குறும்பு, மனநிலை, மனப்போக்கு, மனவிருப்பம், நாட்டம், மனச்சாய்வு, (வி.) இசையச் செய், இணக்கமாக்கு, மனநிறைவு செய், உணர்ச்சியுடன் ஒத்திழைந்து மன நிறைவூட்டு, மகிழச் செய், விட்டுக் கொடு, சலுகையளி, இடங்கொடு.
humoursome
a. மனம்போன போக்கில் செல்கிற, உள்ளம் ஒரு நிலையற்ற, தனிப்போக்குடைய, சிடுசிடுப்பான.
hump
n. கூன், முதுகிலுள்ள இயற்கையான முனைப்பு, ஒட்டகத்தின் திமில், நிலத்தின் குவி முனைப்பு, (வி.) கூனல் வடிவாக்கு, தொந்தரவு செய், ஊக்கமழி, சோர்வூட்டு.
humpback
n. கூனல் முதுகு, கூனுடையவர், கூனன், கூனி, (பெ.) கூனல் முதுகுடைய.
humpbacked
a. கூனிய, முதுகுகூனலுள்ள.
humph
v. ஐயம் தெரிவி, மனக்குறைபாட்டைத் தெரிவி, ஐய ஒலிச்சொல், வெறுப்பொலிச் சொல்.
humpty-dumpty
n. விழுந்தால் எழுந்திருக்க முடியாதபடி தடித்துக் குறுகியவர்.
humpy
n. ஆஸ்திரேலிய நாட்டுக் குடிசை.