English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hunt
n. வேட்டை, வேட்டை நாய்களுடன்கூடிய வேட்டைக்குழு, வேட்டையாடுவதற்குரிய வட்டாரம், பின்துரத்து முயற்சி, தேட்டம், தேடியலையும் முயற்சி, (வி.) வேட்டையாடு, வேட்டைக்குச் செல், வீர விளையாட்டுநாடி வேட்டம் பயில், உணவுக்காக வேட்டை மேற்கொள், இரைநாடி வேட்டைக்கெழு, துரத்திச் செல், பின்தொடர், துரத்தியடி, துருவித்தேடு, வேட்டைக் காட்டைத் துருவிக்கலை, வேட்டையில் குதிரைகளைப் பயன்படுத்து, வேட்டையில் நாய்களை ஈடுபடுத்து.
hunt-the-slipper
n. மிதியடி வேட்டை, கைவிட்டுக் கைமாற்றி அனுப்பிக் கொண்டிருக்கும் செருப்பை வட்டத்திற்குள்ளிருப்பவர் பிடிக்கமுயலும் ஆட்டவகை.
hunter
n. வேடன், வேட்டையாடுபவன், வேட்டையாடுவதற்குப் பயன்படும் குதிரை, கீலோடு கூடிய உலோக முகப்பு மேன்மூடியுள்ள கைக்கடிகாரம்.
hunting
n. வேட்டையாடுதல், வேட்டை, (பெ.) வேட்டையாடுகிற, வேட்டைக்குப் பயன்படுகிற.
hunting-box
n. வேட்டையாடுவதற்குரிய தற்காலிகமான இருப்பிடம்.
hunting-cog
n. இணைந்து சுழலும் பற்சக்கரங்களிரண்டில் ஒன்றில் மட்டும் மிகுதிப்படியாகவுள்ள ஒருபல்.
hunting-crop
n. வேட்டைக்களத்தில் பயன்படுத்தப்படும் கசை.
hunting-field
n. வேட்டைக்களம், நரிவேட்டைக்களம், வேட்டையாளர்களின் கூட்டத்தொகுதி.
hunting-ground
n. வேட்டைக்களம்.
hunting-horn
n. தாரை, வேட்டைக் கொம்பு, பக்கச்சேணத்தில் அண்மைப்பகுதியிலுள்ள இரண்டாவது புடைப்புக்குமிழ்.
hunting-song
n. வேட்டைப்பாட்டு, வேட்டையைப் பற்றிய பாட்டு.
hunting-tide
n. வேட்டைப் பருவம்.
huntress
n. வேட்டையாடும் பெண்.
huntsman
n. வேட்டையாடுபவன், வேட்டையாளன், வேட்டையாடும்போது வேட்டை நாய்களைப் பேணிகாக்கும் பணியாள்.
huntsmanship
n. வேட்டைத் திறலாண்மை.
hurdle
n. இடையீட்டுத் தடைவேலி, பந்தயத்தில தாண்டிச் செல்வதற்குரிய தடுப்புச்சட்டம், துரோகிகளைத் தூக்கிலிட இழுத்துச் செல்லும் மரச்சட்டம், (வி.) மரச்சட்டங்களால் வேலியிடு, தடையிடர்களைச் சுற்றிலும் அமை, தடைச்சட்டத்தின் மீது தாவிக் குதி, இடையீட்டுத் தடைச்சட்ட ஓட்டப்பந்தயத்தில் கலந்தாடு.
hurdle-race, n, hurdles
n. pl. தடைதாவல் ஓட்டப்பந்தயம், இடையீட்டுத் தடைச்சட்டங்களைத் தாண்டிச் செல்லும் ஓட்டப்பந்தயம்.
hurdler
n. நீள்சதுர மரச்சட்டங்களைச் செய்பவன், இடர் இடையீட்டு ஓட்டப் பந்தயங்களில் ஓடுபவன்.
hurdy-gurdy
n. கைப்பிடியைச் சுற்றி இயக்கும் இசைப்பெட்டிவகை, தெருவில் பாடுவதற்கான இசைப்பெட்டி வகை.
hurl
n. எறிவு, சுழல் வீச்சு, (வி.) வீசி எறி, தூக்கி எறி, சுழற்றி வீசு.