English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hush-ship
n. மறைகட்டுப் பெட்டிக்கப்பல், தொலைவாற்றல் மிக்க பீரங்கியுடன் மிகுவிரைவும் நீளமும் உடையதாகக் புறந்தெரியா மறைகட்டுமானமுடைய கப்பல்.
husk
n. உமி, வித்துக்களின் புறத்தோடு, புறத்தோல், மீந்தோல், உமிபோன்ற இயல்புடையது, சப்புச்சவறு, மோசமான பொருள், பயனற்ற பொருள், ஒட்டுணியால் கால்நடைகளுக்கு வரும் தொண்டை நோய் வகை, (வி.) உமிபோக்கு, மேல்தோடு அப்புறப்படுத்து.
husky
-1 n. உடலுரமுடையவர், திடமமைந்த உடல்வாய்ந்தவர், (பெ.) உமிசார்ந்த, உமியாலான, உமிநிரம்பிய, உமிபோன்ற, உலர்ந்த, கம்மிய, குரல்கட்டிய, ஒலியெழாத, கரகரப்பான, திடமான, உடலுயரம் வாய்ந்த.
hussar
n. பளுவற்ற படைக்கலந் தாங்கிய குதிரைப்படை வீரர்.
Hussite
n. பொஹீமியா நாட்டில் 15-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஜான் ஹல் என்ற முனைத்த சமய சீர்திருத்தத் தலைவரைப் பின்பற்றுபவர்.
hussy
n. அடிச்சேரியாள், துடுக்குக்காரி.
hustings
n. தேர்தல் நடவடிக்கைகள், லண்டன் மாநகர வழக்கு மன்றம், முற்காலத்தில் சட்ட மாமன்ற உறுப்பினர் அமர்வு அறிவிக்கப்பட்ட மேடை.
hustle
n. பரபரப்பு, நெருக்கடி ஆரவாரம், (வி.) நெருக்கு, உந்தித்தள்ளு, தள்ளு, விரைந்து திணி, குலுக்கு, ஆட்டி அலட்டு, வலிந்து வழிஉண்டுபண்ணிச் செல், விரை, அவசரப்படு, ஆரவாரஞ்செய்.
hut
n. சிறு குடில், புல் வீடு, தற்பொழுதைய தங்கிடம், படைவீரர்களுக்கான தற்பொழுதைய பலகை வீடு, (வி.) குடிசையில் தங்கு, படைவீரரைத் தங்கல் குடிசையில் அமர்வி.
hut-circle
n. தொல்பொருள் ஆராய்ச்சித்துறையில் வரலாற்றுக்கு முற்பட்டகாலக் குடிலின் சின்னமான வளைகற் கட்டுமானம்.
hutch
n. குழிமுயல்களுக்கான பெட்டி, சிறிய அறை, சிறு வீடு, குடிசை, சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் கட்டை வண்டி.
hutment
n. படைவீரர் குடிசைத் தொகுதி, படைவீடு.
Huzoor
n. (அரா.) மரியாதை வழக்கு.
huzza
n. மகிழ்வொலி, பாராட்டு அரவம், (வி.) பாராட்டி ஆரவாரம் செய், மகிழ்ச்சியைக் காட்டும் வியப்பிடைச் சொல்.
hy-spy
n. கண்பொத்தி விளையாடல்.
hyacinth
n. செந்நீலம் முதலிய நிறங்களையுடைய மணி வடிவ மலர்களையும் கிழங்கந்தண்டுகளையும் உடைய செடிவகை, செந்நீல நிறம், ஒண்மணிக் கல்வகை.
Hyades
n. pl. விண்மீன் குழுக்களில் ஒன்று.
hyaline
n. படிகநிறப் பரப்பு, அமைதியான கடற்பரப்பு, நீல வான்பரப்பு, (பெ.) படிகவியலான, கண்ணாடிபோன்ற, தௌிவான, ஒளி ஊடுருவுகின்ற.
hyalite
n. நிறமற்ற ஒண்மணிக்கல் வகை.