English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hospitality
n. விருந்தோம்பும் பண்பு, வேளாண்மைக் குணம்.
hospitalize
v. மருத்துவமனையில் சேர், மருத்துவமனையில் கட்டுப்படுத்தி வை, மருத்துவமனைக்கு அனுப்பு.
hospodar
n. முற்கால ருமேனிய நாட்டு வழக்கில் பெருமகன்.
host
-1 n. தொகுதி, பெருந்திரள், படை, கணம், பெருங்கூட்டம், மிகுந்த எண்ணிக்கையுடைய குழு.
hostage
n. பிணையாக நிறுத்தப்பட்டவர், பிணையாக நிறுத்தப்படும் நிலை.
hostel
n. மாணவர் இல்லம், மாணவர் போன்ற தனி வகுப்பினர் தங்கு விடுதி.
hostelry
n. வழிமனை, சாவடி, தங்கல்மனை.
hostess
n. விருந்தினரை உபசரிக்கும் பெண், விருந்தோம்பும் பண்புள்ளவன், தங்கல் மனைத் தலைவி, விடுதித் தலைவி.
hostile
a. எதிரியைச் சார்ந்த, எதிர்ப்புணர்ச்சியுள்ள, எதிர்க்கின்ற, போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள, போர் நிகழ்ச்சிகள் சார்ந்த.
hostilities
n. pl. போர் நடவடிக்கைகள், போர் நிகழ்ச்சிகள், கருத்து முதலியவற்றில் எதிர்ப்பு.
hostility
n. பகைமை, எதிர்ப்பு, போர் நிலவரம்.
hot
a. சூடான, மிக வெப்பமான, வெப்பம் உண்டுபண்ணுகிற, நெருப்பைப் போன்ற, புழுக்கமிக்க, உயர்வெப்பநிலை உயை, வெப்ப உணர்ச்சி தருகிற, சூடு ஊடு செல்லவிடுகிற, சுவை வகையில் சூடாகப் பரிமாறப்படுகிற, செய்தி வகையில் புத்தம் புதிரான, நிகழ்வணித்தான, கலை வகையில் அணிச் செறிவுடன் விரைசந்தமிக்க, விரைவான, அடுத்தடுத்துத் தொடர்கிற, போட்டி வகையில் வெல்லும் பெரு வாய்ப்புடைய, வெற்றி வாய்ப்பு மிகுதி உடையராகக் கருதப்படுகிற, வெகுளியுடைய, மனத்தைப் புண்படுத்துகிற, எழுச்சியூட்டுகிற, ஆர்வமிக்க, உணர்ச்சி வேகமிக்க, கொந்தளிப்பான, மூர்க்கமான, வல்லந்தனமான, சிற்றின்ப எழுச்சிமிக்க, கேடு விளைக்குமளவு மின்னாற்றல் ஊட்டப்பட்ட, இடர் நிறைந்த, தேடப்பட்ட பொருளுக்கு அண்மையிலுள்ள, உணர்ச்சிளைத் தூண்டத்தக்க, உணர்ச்சிளைத் தோற்றுவிக்கும் பகுதிகளையுடைய, அண்மையிலேயே திருட்டுத் தனமாகப் பெற்ற, விளையாட்டு நடவடிக்கைகளில் எதிர்ப்பக்கத்தினரால் தடுக்க முடியாத இயல்புடைய, (வி.) சூடாக்கு, வெதுவெதுப்பு ஊட்டு, (வினையடை) சூடாக, நெருக்கி, ஆர்வமாக, சீற்றத்துடன், எழுச்சியுடன்.
hot-air
a. வெப்பக்காற்றைப் பயன்படுத்துகிற, தற்புகழ்ச்சியுள்ள, பயனில பேசுகின்ற, வீண்சொல்லாடுகின்ற.
hot-and-hot
a. சமைத்தவுடனே சூட்டோடு பரிமாற்றப்பட்ட.
hot-blooded
a. சூடான குருதியுடைய, சமநிலைக் குருதி வெப்பமுள்ள, மன எழுச்சிமிக்க, துணிந்து செயலாற்றுகிற, உணர்ச்சி மிகுந்த, எரிச்சலுட்டுகிற.
hot-brained
a. எளிதில் உணர்ச்சியூட்டப்படத்தக்க.
hot-cockles
n. கண்ணாம்பூச்சி ஆட்ட வகை, கண்பொத்திய நிலையில் குட்டியவர் யாரென ஊகித்துரைக்கும்படி விடப்படும் ஆட்டம்.
hot-dog
n. சூடான காரச் சோமாரி வகை.
hot-gospeller
n. வலுவூட்டும் உணர்ச்சிமிக்க கிறித்தவ சமயச் சொற்பொழிவாளர்.
hot-mouthed
a. குதிரை வகையில் அடங்காத, கடிவாள ஈர்ப்புப் பெறாத.