English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hot-short
a. இரும்பு வகையில் சூடானபோது எளிதில் நொறுங்கத்தக்க.
hotbed
n. விரைவளர்ச்சிச் சேமக்கலம், செடிகள் விரைவாக வளர்ச்சியுறும் படி, மக்கிப் புளித்த எருப்படுகையால் வெதுவெதுப்பாக்கப்பட்டுக் கண்ணாடியால் மூடப்பட்ட பாத்தி, விரை வளர்ச்சிக்குகந்த இடம்.
hotblast
n. கடுவெப்பக்காற்று.
hotbrain
n. முரட்டுத்தனமானவர், முரட்டுப்பிடியுள்ளவர்.
hotchkiss
n. இயந்திரத் துப்பாக்கி வகை.
hotchpot, hotchpotch
n. ஆட்டிறைச்சியும் காய்கறிகளும் கலந்த குழம்பு வகை, கூட்டுக்குறி, (சட்.) விருப்ப ஆவணம் எழுதாமல் இறக்கிற பெற்றோரின் சொத்துக்களை எல்லாம் சமபங்குகளாக்குவதற்காக எல்லாச் சொத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்தல், குழப்பம், தாறுமாறான குவியல்.
hotel
n. வழித்தங்கல்மனை, வழிப்போக்கர் தங்குவதற்கான விடுதி, அருந்தகம், பணம்பெற்று உணவும் உறையுளும் அளிக்கும் நிறுவனம்.
hotelier
n. உணவகம் வைத்து நடத்துபவர்.
hotfoot
adv. மிகு விரைவாக, வேகமாக.
hothead
n. இறுமாப்பு பிடிமுரண்டுடையவர், மூர்க்கர், முரடர்.
hothouse
n. சேமச்செடிப் பண்ணை வீடு, பருவந்தப்பியும் குளிர்மண்டலத்திலும் வளரும்படியாக வெப்பநிலையூட்டப்பட்ட நிறைகண்ணாடிக்க கட்டிடம், சூளையில் வைப்பதற்கு முன் பச்சை மட்கலங்கள் வைக்கப்படும் சூடான அறை.
hotpot
n. கொத்தி உருளைக்கிழங்கோடு சூட்டடுப்பிலிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சியுள்ள மூடியிறுக்கமுடைய உண்கலம்.
hotpress
n. துணி தாள் ஆகியவற்றின் மேற்பரப்பை வழவழப்பாக்கும்படி சூடான தகடுகளிடையே வைத்து அழுத்துவதற்குரிய கருவி, (வி.) வழவழப்பான மேற்பரப்பை உண்டுபண்ணுவதற்குச் சூடான தகடுகளிடையே அழுத்து.
hotspur
n. துடுக்கானவர், முன்பின் பாராதவர், ஆத்திரமுள்ளவர்.
hottempered
a. முன்கோபமுள்ள.
Hottentot
n. மேய்ச்சல்தொழில் கொண்ட தென் ஆப்பிரிக்க நாடோடி இனத்தவர், நாகரிகப்படியில் தாழ்ந்தவர், அறிவு பண்பாட்டில் முதிர்நிலை பெறாதவர்.
hough
n. விலங்கின் பின்னங்காலின் முழங்காலுக்கும் காற்குழைச்சுக்கும் இடையிலுள்ள இணைப்பு, (வி.) முழங்கால் தசைக்கயிற்றை அறு, கால்தசை நாணறுத்து உருக்குறை.
hound
n. வேட்டைநாய், மோப்ப உணர்ச்சியுடைய நாய் வகை, வெறுக்கத்தக்கவன், அயோக்கியன், வேட்டையாடுபவர், அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்று வேட்டையாடுபவர், விடாமுயற்சி செய்து தேடுபவர், துரத்திப்பிடிக்கிற விளையாட்டு வகையில் துரத்துபவர், மீன்வகை, (வி.) வேட்டை நாய் கொண்டு துரத்து, வேட்டை நாயை ஏவு, ஆளை ஏவு, தூண்டு.
hounds-tongue
n. மயிரிழை போன்ற புற வளர்ச்சியுள்ள இலைகளும் நீல மலர்களும் கொண்ட செடிவகை.
hour
n. ஒருமணி நேரம், அறுபது நிமிடங்கள் கொண்ட காலக்கூறு, மணிப்பொறி காட்டும் நேரம், மணிநேரம்.