English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Helicon
n. கிரேக்க கலைத்தெய்வங்களின் இருப்பிடமான மலை, கவிதை அகத்தூண்டுதலின் தலையூற்று.
Heliconian
a. கிரேக்க கலைத்தெய்வங்களின் இருப்பிடமான மலைக்குரிய, கவிதை அகத்தூண்டுதல் தருகிற.
helicopter
n. செங்குத்தாக மேலெழுப்பி இறங்கவல்ல திருகு வானுர்தி.
heliocentric
a. கதிரவன் மண்டல மையத்திலிருந்து காணும் நிலைப்பட்ட, கதிரவனையே மையமாகக் கொண்ட.
heliochromy
n. இயல்வண்ண நிழற்படப் பதிவுமுறை.
heliogram
n. சூரியன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக் காட்டி அனுப்பப்படும் அடையாளச் செய்தி.
heliograph
n. ஒளி படிவத்தால் ஏற்படும் செதுக்குருவம், நிழற்படமுறைச் செதுக்குப்படிவம், கதிரவனைப்படம் பிடிக்கும்நிழற்படக் கருவியமைவு, கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பும் முறை, ஒளிச்செறிவுமானி, (வி.) கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பு, ஞாயிற்றின் ஒளிபடுவதால் ஏற்படும் மாறுபாட்டு மூலம் நிழற்படமெடு.
heliographic
a. கதிர்மண்டல ஆய்வுவிளக்கம் சார்ந்த, ஒளியூடுருவு செதுக்குமானம் பற்றிய, கதிர் எதிரொளிப்பு அடையாளச் செய்தி குறித்த.
heliography
n. கதிரவன் மண்டலம் பற்றிய ஆய்வு விளக்கம், ஒளியூடுருவலால் ஏற்படும் செதுக்குமானம், கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்புதல்.
heliogravure
n. நிழற்படமுறைச் செதுக்குமானம், நிழற்படி எதிர்ப்படியை உலோகத் தகட்டுக்கு மாற்றி இழைத்த செதுக்கு வேலை.
heliolithic
a. பரிதிக்கல் பண்பாடு சார்ந்த, கதிரவன் வழிபாடும் வழிபாட்டுப் பெருங்கல்லும் இடம்பெறும் நாகரிகப் படிக்குரிய.
heliometer
n. குறுக்கைமானி, கதிர்மண்டல விட்டத்தையோ விண்மீன்களிடைத் தொலையையோ அளக்கும் கருவி.
helioscope
n. கண்ணுக்குக் கேடின்றிக் கதிரவன் மண்டலத்தைக் காண்பதற்கு உதவும் கருவி.
heliotherapy
n. கதிர் மருத்துவமுறை, கதிரொளிப்படிவு மூலம் நோய் குணப்படுத்தும் மருத்துமுறை.
heliotrope
n. மணமிக்க கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை, கருஞ்சிவப்பு மலர்வகையின் மணம், குருதிநிற மணிக்கல் வகை.
heliotropic
a. (தாவ.) ஒளி நோக்கிய சாய்வுத்தொடர்பான, ஒளிநோக்கிச் சாய்கிற.
heliotype
n. பசை ஒளிப்படம், ஒளிபடியும் பசைபூசிய தகட்டினின்று கிடைக்கும் படம்.
heliscoop
n. வானுர்திக் காப்புத் திருகுவலை.
helisois
n. வெயிற்காட்ட நோய், (தாவ.) கண்ணாடி வழிஒளிக்கதிர்கள் செறிவுறலால் இலைகள்மீது ஏற்படும் கறைப்புள்ளிகள்.
helium
n. பரிதியம், கதிரவன் மண்டலத்திலிருப்பதாகக் கருதப்பட்ட தனிமவளி, 1க்ஷ்6க்ஷ்-இல் முதல்முதலாகக் கண்டுணரப்பட்ட தனிமம்.