English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
helot
n. ஸ்பார்ட்டா என்ற பண்டைக் கிரேக்க நகரிலுள்ள அடிமை வகுப்பினருள் ஒருவர், அடிமை வகுப்பினர், உரிமையற்றவர்.
helotry
n. அடிமைகளின் தொகுதி, அடிமை வகுப்பினர் குழு.
help
n. உதவி, துணை, ஆதரவு, துணைவலு, ஊக்காற்றல், தீர்வு வழி, போக்கு, புகல், உணவு பரிமாற்றம், உதவியாளர், ஆதரவாளர், வீட்டு வேலையாள், தொழிலாளி, (வி.) உதவு, துணையளி, ஆதரவு வழங்கு, வெற்றியில் பங்குகொள், செயலில் துணைசெய், வகைதுறை கருவி வழங்கு, தேவையானவை அளித்துதவு, பகுதி கொடுத்துதவு, பங்கு பெற்றளி, பங்கிட்டளி, துயர் நீக்கு, நோவு அகற்று, தணி.
helpful
a. பயனுடைய, உதவியாள், உதவி செய்கிற.
helping
n. உதவுதல், பரிமாறுகை, பரிமாறிய பகுதி, (பெ.) உதவுகிற.
helpless
a. உதவியற்ற, தன் செயலற்ற, உதவி செய்யாத.
helpmate, helpmeet
வாழ்க்கைத்துணை, பக்கத்துணைவர்.
helter-skelter
n. சீர்க்குலைவு, தாறுமாறான நிலை, (பெ.) தாறுமாறான, குழப்பமுற்ற, (வினையடை) தாறுமாறாக, அவசர அவசரமாக, முற்றிலும் குழப்பமுற்று.
helve
n. கோடாரியின் காம்பு, கருவியின் கைப்பிடி.
Helvetian
n. ஸ்விட்ஸர்லாந்து நாட்டவர், (பெ.) ஸ்விட்ஸர்லாந்து நாட்டுக்குரிய.
hem
-1 n. விளிம்பு, துணியின் மடித்த ஓரம், (வி.) ஓரம் உள் மடித்துத் தை.
hem-line
n. உள்மடித்துத் தைத்த பாவாடை விளிம்பு.
hem-stitch
n. விளிம்பு மடிப்புத் தையல்.
hemianopsia
n. அரைக் குருடு, அரைப்பார்வை மங்கல்.
hemicycle
n. அரைவடிவப் பிறை, அரைமதி வடிவம்.
hemidemisemiquaver
n. இசைமானக்கால நுட்பக்கூறு.
hemihedral
a. மணியுருக்களில் முழுநிறைதள எண்ணிக்கையில் பாதியுடைய.
hemimetabola
n. pl. (வில.) முழு அளவில் மெய்யுருமாற்றம் பெறாத பூச்சிகள்.
hemiplegia
n. ஒருபுறமாகச் செயலாற்ற தன்மையூட்டும் வாத நோய்.
hemisphere
n. அரையுருண்டை வடிவம், நிலவுலக அரைக்கோளம், நிலவுலக அரைக்கோள மனைப்படம், வான்கோள கையின் பாதி, மூளையின் இருபாதிகளில் ஒன்று.