English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
heel
-1 n. குதி, குதிகால், விலங்கின் குளம்புக்கு மேற்பட்ட பின்பகுதி, குளம்பின் பின்பகுதி, காலடி, விலங்கின் பாதம், புதையடியின் குதியடிக்கட்டை, காலுறையின் குதிகாற்பகுதியின் பின்புறம், யாழ் வில்லின் கைப்புற அடி, வளைகோற் பந்தாட்டத்தில் கோலின் அடிவளைவு, கப்பலடிக் கட்டையின் பின்புறம், குதிகாலிற் பொருந்தும் தார்முள், அப்பத்தின் மேன்முளை, அப்ப அடிமுளை, உறைபாற்கட்டியின் புறமுளை, (வி.) நிலத்தைக் குதிகாலால் தொடு, ஆடலின்போது குதிகால்மீது இயங்கு, புதையடிக்குக் குதிகாற் கட்டை இணை, அருகாகப் பின்தொடர், பின்பற்று, உதைபந்தாட்டில் பந்தைக் குதிகாலால் பின்னோக்கி எற்று, வளைகோற் பந்தாட்டத்தில் கோலின் வளைபகுதியால் பந்தடி, போர்க் கோழிகளுக்குக் காலில் குதிமுள் வைத்திணை, குதிகாலைப் பற்றிப்பிடி.
hefty
a. வலிமை வாய்ந்த, திண்ணிய.
hegemonic
a. தலைமை வாய்ந்த, மேலாட்சி செய்கிற.
hegemony
n. தலைமை, கூட்டாட்சித் தலைமைநிலை, முதன்மையான செல்வாக்கு.
hegira
n. முகமதுநபி நாயகம் மக்கா நகரினின்று மதீனா நகர் நோக்கிச் சென்ற ஓட்டம், இஸ்லாமிய சகாப்த தொடக்கம்.
heifer
n. ஈனாப்பெற்றம், கன்றுபோடாத இளம்பசு.
heigh
int. ஊக்குதற் குறிப்புவிளி, உசாவுதற் குறிப்புவிளி, மகிழ்வுக் குறிப்பு.
heigh-ho
int. சோர்வுக்குறிப்பு, மனக்கசப்புக் குறிப்பு.
height
n. உயரம், உயர்வு, உயர்த்தின் அளவு, தலைக்கு மேலுள்ள தொலை, மேல்நோக்கிய தொலை, மீகோணம், உயர்ந்த இடம், உயரத்திலிருக்கும் பொருள், குன்று, மேடு, ஏற்றம், மேல் நோக்கிய சரிவு, உச்சி, உச்சநிலை, உச்ச அளவு, உயர்சிறப்பு, உயர்தகுதி, மேம்பாடு.
heighten
v. உயர்வாகு, மிகைப்படுத்து.
heir
n. உரிமையாளர், மரபுவழி உடைமைக்கு உரியவர், சட்டமுறை உரிமை உடையவர், தகுதி உரிமையாளர், பண்புக்கு உரிமைப்பட்டவர், பின்தோன்றல், வழித்தோன்றல், மைந்தன், முதல்மகவு.
heiress
n. பெண் உரிமையாளர், பெருஞ்செல்வத்தை உரிமையாகப் பெற்றுவிட்ட மாது, பெருஞ்செல்வத்தை உரிமையாகப் பெற இருக்கிற பெண்.
heirless
a. பின்னுரிமையாளர் இல்லாத.
heirloom
n. சொம்மு, மரபுரிமையாளர் உடைமையுடன் பழக்கப்படி வந்து சேரும் உடைமைப் பொருள், குடும்ப மரபாய் வரும் உடைமைப் பொருள், வழிவழி உடைமை.
held, v. hold
என்பதன் இறந்தகால-முடிவெச்சம்.
heliacal
a. கதிரவனைச் சார்ந்த, சூரியனுக்கு அணித்தான, கதிரவன் மண்டலத்தோடியைந்து காணப்பெறுகிற, கதிரவன் மண்டலத்திற்கு மிக அருகாகத் தோற்றுகிற.
Helianthus
n. சூரிய காந்தியை உட்படுத்திய நெஞ்சிப் பேரினம்.
helices, n. helix
என்பதன் பன்மை.