English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
heavy-spar
n. பாரியக் கந்தகை.
heavy-weight
n. மட்டமான அளவுக்கு மேற்பட்ட கனமுடைய பொருள், மட்டளவு மீறிய கனமுடையவர், கேளிக்கைகளில் கனமிக்க வகுப்பினர், குத்துச்சண்டையில் தொழில் துறையாளரிடையே 1ஹ்5 கல் எடைக்கும் விருப்பத்துறையாளரிடையே 1ஹ்க்ஷ் கல் எடைக்கும் மேற்பட்ட கனமுடையவர்.
hebdomad
n. ஏழன் அடுக்கு, வாரம், மனித ஆற்றலை மீறிய ஆவிகளின் தொகுதி.
hebdomadal
a. வார முறையான, வாரந்தோறும் நிகழ்கிற.
hebdomadary
n. திருக்கோயில் அல்லது கன்னிமாடத்து வாரத் தவணைப் பணியாளர், (பெ.) வாரஞ் சார்ந்த, வாரந்தோறுங் கூடுகிற.
Hebe
n. கிரேக்க புராண மரபில் தேவர்களுக்கு இன்தேறல் வழங்கும் இளமைப் பருவத்துக்குரிய பெண்தெய்வம், அருந்தகப் பணிப்பெண்.
hebetate
v. உணர்ச்சி மழுங்கலாக்கு, உணர்ச்சி மழுங்கலாகு.
Hebraic, Hebraical
எபிரேய மக்களைச் சார்ந்த, எபிரேய மொழியைச் சார்ந்த.
Hebraically
adv. எபிரேய மொழிமரபைப் பின்பற்றி, எழுத்துவகையில் வலமிருந்து இடமாக.
Hebraism
n. எபிரேயர்களின் பண்பு, எபிரேய சமயம், எபிரேய சமயக் கோட்பாடு, எபிரேய மொழிமரபு.
Hebraist
n. எபிரேய மொழிப்புலவர், எபிரேய சமயப்பற்றுடையார், யூதர் கருத்துக்களை மேற்கொள்பவர்.
Hebraistic, Hebraistical
a. யூதரைச் சார்ந்த, யூதரைப் போன்ற, எபிரேய மொழி சார்ந்த, எபிரேய மொழி போன்ற.
Hebraize
v. எபிரேயமாக்கு, எபிரேய மொழிமரபைப் பயன்படுத்து, எபிரேய வழிகளைப் பின்பற்று.
Hebrew
n. பண்டைய இஸ்ரேயில் நாட்டைச் சார்ந்தவர், யூதர், எபிரேயமொழி, பண்டைக்கால எபிரேய மொழி, விளங்காத மொழி, புரியாத நடை, (பெ.) எபிரேய மொழியைச் சார்ந்த, யூதர்களைச் சார்ந்த.
hecatomb
n. பண்டைக் கிரேக்கரிடையே பெரும் பொதுப்பலியாட்டு, நுறு எருதுகளைப் பலியிடும் பெரும்பலி, படுகொலைத் தொகுதி.
heck
n. படல், ஆறுகளில் மீன்களின் போக்கைத் தடுக்கும் அழிச்சட்டம்.
heckle
n. சிக்குவாரி, சணல் சிக்கு எடுக்கும் எஃகுச் சீப்பு, (வி.) வினாக்களால் திகைக்க வை.
hectare
n. 2.4ஹ்1 ஏக்கர் கொண்ட பதின்மானமுறை நிலப்பரப்பு அளவை.