English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hearthrug
n. கணப்பு விரிப்பு.
hearthstone
n. கணப்பு அடுப்பாகப் பயன்படும் கல்.
heartily
adv. மனமார, நல்லெண்ணத்துடன், முழு மனத்துடன், மனமுவந்து, மனத் திட்பத்துடன், பசிச்சுவையுடன், வயிறார, பசிதீர.
heartless
a. உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, வீரமற்ற, மனச்சான்றின் உறுத்தலுக்கு இடமற்ற வகையில் காழ்ப்புடைய.
heartlet
n. சிறு இருதயம்.
hearts-ease
n. மலர்ச்செடி வகை.
heartsome
a. எழுச்சி ஊட்டுகிற, மகிழ்ச்சி விளைவிக்கிற.
hearty
n. மாலுமிகளை விளிக்கும் சொல், பல்கலைக்கழக வழக்கில் உடற்பயிற்சி விளையாட்டாளர், (பெ.) உள்ளார்ந்த, உளங்கனிந்த, ஊக்கமுள்ள, தீவிரமான, ஏராளமான, வளம் நிறைந்த.
heat
n. சூடு, பொருள்களின் உயர் வெப்பநிலை, வெப்பம், வானிலையின் கொதிப்பு, பொறுக்கமுடியா வெப்பம், வெப்ப உணர்ச்சி, உடல் வெப்பு, வெக்கை, புழுக்கம், மிகு வெப்ப நிலை, வெயிலின் உச்சநிலை, வெப்பமிக்க வேளை, வெப்பார்ந்த வானிலை, தோலின் செந்நிறம், வியர்க்குறு, கடுங்காரச்சுவை, எரிப்பு, உணர்ச்சியின் உச்சநிலை, உணர்ச்சி வேகம், எழுச்சி, சீற்றம், வெகுளி, பரபரப்பு, விறுவிறுப்பு, தீவிர கட்டம், வேகம், விரைவு, சிற்றின்ப வேகம், விலங்குப்பெடையின் வேட்கைப் பருவம், விளையாட்டுக்களில் ஒரு தடவை ஆட்டம், (வி.) சூடாக்கு, குருதிக் கொதிப்பூட்டு, உணர்ச்சி வேகம் உண்டுபண்ணு, சினமூட்டு, சூடாகு.
heat-apoplexy
n. கடுவெயில் அதிர்ச்சி.
heat-spot
n. வேனிற் கொப்புளம், வெப்பநிலை அறியும் தோற்பகுதி.
heat-stroke
n. கடு வெப்பத்தினால் ஏற்படும் மயக்க நோய்.
heat-wave
n. அனற் காற்று, வளி மண்டலத்திலுள்ள கடு வெப்பக் காற்று நிலை.
heater
n. சூடேற்றுபவர், சூடுட்டுங் கருவி, அறையை அல்லது கட்டிடத்தை வெப்பமாக்கும் அமைவு, சலவைத் துணி தேய்க்கும் பெட்டியைச் சூடாக்குங் கருவி.
heath
n. கரம்பு நிலம், புதர்க்காடு, புதரடைந்த சமவெளி, புதர்ச்செடி வகையின் பெயர்.
heath-bell
n. புதர்ச்செடியின் மலர்.
heath-berry
n. கரம்பு நிலங்களில் காணப்படும் புதர்ச்செடிகளில் உள்ள கொட்டைக் கனிவகை.
heath-cock
n. கறுப்புக் காட்டுச் சேவல்.
heathen
n. புறச் சமயத்தினர், கிறித்தவரோ யூதரோ இஸ்லாமியரோ அல்லாத பிற சமயத்தார், மத நம்பிக்கையற்றவர், சமயம் பற்றிய அக்கறையற்றவர், மெய்விளக்கம் பெறாதவர், (பெ.) புறச் சமயத்தைச் சார்ந்த, மெய்விளக்கம் பெறாத, மத நம்பிக்கையற்ற, சமயப் பற்றற்ற.
heathendom, heatheness, heathenism, heathenry,
புறச் சமயத்தினர் மத அமைப்பு, சமய நம்பிக்கை இல்லாமை, புறச்சமயத்தைச் சேர்ந்த பண்பு, காட்டு மிராண்டித்தன்மை, புறச்சமயம் நிலவியுள்ள உலகப் பகுதிகள்.