English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hectic
n. எலும்புருக்கிக் காய்ச்சல், 'உளமாந்தை', எலும்புருக்கி நோயாளி முகஞ்சிவந்த நிலை, (பெ.) எலும்புருக்கிக் காய்ச்சல் உள்ள, எலும்புருக்கி நோய்க்கு ஆட்பட்ட, நோய் நிலையால் முகஞ்சிவந்த.
hectogram, hectogramme
n. நுறு கிராம், 3.52ஹ் அவுன்சு கொண்ட எடை அளவை.
hectograph
n. கைப்பிடி பெருக்கி, கையெழுத்துப்படி எடுக்கும் கருவி, (வி.) கைப்பிடி பெருக்கியினால் படிகள் எடு.
hectoliter, hectolitre
n. நுறு லிட்டர் கொண்ட பதின்மான முகத்தலளவை.
hectometer, hectometre
n. நுறு மீட்டர், 32க்ஷ்.0க்ஷ்ஹீ அடி கொண்ட பதின்மான நீட்டலளவை.
hector
n. தற்புகழ்ச்சியாளர், வீம்பு பேசுபவர், எளியவரைக் கொடுமை செய்பவர், கொடுமைக்காரர், (வி.) மெலியாரைக் கொடுமை செய், வீறாப்பு பேசு.
heddles
n. pl. தறியில் ஊடிழை நுழைந்து செல்லும் புழையுடைய கயிறு அல்லது கம்பி.
hedge
n. புதர் வேலி, எல்லைக் குறுமர வரிசை, எல்லைக் குத்துக்கல் வரிசை, புல்கரண் எல்லைக்கோடு, எல்லை குறிக்கும் பொருள் வரிசை, எல்லை, வேலி, பந்தயம் சூதாட்ட முதலியவற்றில் இழப்பீட்டுக் கைகாப்புத்துறை, இழப்பீட்டுக் கைகாப்பு ஏற்பாடு, (வி.) குறுவேலியிட்டு வளை, சூழ், அடைப்பு செய், தடு, இடையிட்டுத் தடையமை, தடுத்து நிறுத்து, காவல் செய், கைகாப்புத் துறை மூலம் இழப்பிலிருந்து தன்னைக் காத்துக்கொள், தடைவேலிகள் வகு, பொறுப்பேற்றலைத் தவிர்.
hedge-priest
n. தாழ்நிலையுடைய கல்லாச் சமயகுரு.
hedge-row
n. புதர்வேலி வரிசை, மரவரிசை வேலி.
hedge-school
n. கீழ்த்தரப்பள்ளி, திறந்தவெளிப் பள்ளி.
hedgehog
n. முள்ளொலி, முள்ளமைப்புக் காப்புடைய சிற்றுயிர் வகைகளில் ஒன்று, படைத்துறையில் தடையரண் வேலிகளால் சூழப்பட்ட தனிநிறைவுடைய காப்பிடம், ஒப்புரவற்றவர், பழகப் பொருந்தாதவர்.
hedgesparrow
n. வேலிக்குருவி, வேலிகளில் உள்ள இசைப்பறவை வகை.
hedonic
a. இன்பத்துக்குரிய.
hedonics
n. pl. அறநுலில் இன்பக் கோட்பாடு, உளநுலில் இன்பவியல்.
hedonism
n. அறநுல் வகையில் இன்பமே சிறந்தநலம் என்னுங் கோட்பாடு.
hedrangea
n. வெள்ளை நீலக் கருஞ்சிவப்பு நிறங்களையுடைய உருள் பூங்கொத்துக்களைக் கொண்ட குறுஞ் செடிவகை.
hee-haw
n. கழுதையின் கனைப்பு, உரத்த சிரிப்பு, (வி.) கழுதைப்போலக் கத்து.
heed
n. கவனம், முன்னறிவு, எச்சரிப்புணர்வு, கருத்துணர்வு, (வி.) கவனத்திற் கொள், கருத்திற் கொள், அக்கறை கொள், பொருட்படுத்து, கூர்ந்துபார், கருதிப்பேணு, உற்றுக்கவனி.
heedful
a. கவனமுள்ள, முன் கருதியிருக்கிற.