English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
guts
n. pl. குடல், விலங்குடலின் உள்ளீடு, உள்ளீடு, உள்ளார்ந்த தகுதித, வயிறு, உந்தாக்கம், முந்தாற்றல், தாங்குறுதி.
gutta
n. (க-க.) கிரேக்கச் சிற்ப வகையில் துளி போன்ற அணி ஒப்பணை.
gutta-percha
n. கட்டிறுக்க சாம்பல் நிற மரப்பால் பிசின் வகை, (பெ.) மரப்பால் பிசினாலான.
guttate, guttated
துளிகள் கொண்டுள்ள, (தாவ.) புள்ளிகள் உள்ள.
gutter
n. சாக்கடை, தெரு ஓரக்கால்வாய், வடிநீர்க்கால், நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய், வாரி நீரோடை, இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம், சால்வரி, நீள்வரிப்பள்ளம், ஓரவெட்டு வரிப்பள்ளம், அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை, சேரிவாழ்வு, சமுதாய இழிநிலை, (வினை) வடிகால் உருவாக்கு, சால்வரியிடு, வரிப்பள்ளமிடு, பள்ளமாக அகழப்பெறு, ஓடையாக ஒழுகு, வடிகால் வழி ஓடு, துளித்துளியாய் விழு, விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு.
gutter-blood
n. இழிபிறப்பாளர், நகர உள்ளுர்வாணர், நகரத்திலேயே பிறந்து வாழ்பவர்.
gutter-child
n. யாருமிலாக் குழவி துணையற்ற குழந்தை.
gutter-man, guttermerchant
n. தெருவோரச் சிறு வணிகன்.
gutter-snipe
n. துணையற்ற குழந்தை, பெற்றோரை இழந்த குழந்தை.
guttiferous
a. துளிகள் புறங்கசிகிற, இருவிதையிலைச் செடி வகை சார்ந்த.
guttle
v. பேராவலோடு உண்ணு,
guttural
n. மிடற்றொவி, (பெ.) மிடறு சார்ந்த, தொண்டைடயில் ஒலிக்கின்ற முதல் நா அண்ணத்தினிடைப் பிறக்கின்ற.
gutturalize
v. மிடற்றொவி ஆக்கு, தொண்டையில் ஒலி.
gutturo-maxillary
a. மிடற்றையும் தாடைகளையும் சார்ந்த.
gutty
n. குழிப்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் கட்டிப்பிசின் பந்து.
guy
-1 n. சமநிலைப் பிணிப்பு, பாரந்தூக்கி கூடாரம் முதலிய வற்றைச் மநிலைப்பட இழுத்து நிறுத்தும் கயிறு அல்லது சங்கிலி முதலியவற்றாலான பிணைப்பு, (வினை) சமநிலைப் பிணைப்பு மூலம் பிணித்துவை.
Guys, Guys Hospital
n. லண்டன் மாநகர மருத்துமனை.
guzzle
v. பேரார்வத்துடன் உண்ணு, பேராவலுடன் குடி, தின்று குடித்துப் பெரும்பணம் அழி.
gwiniad, gwyniad
வெண்ணிறத் தசையுடைய ஏரி மீன் வகை.
gybe
v. கப்பலின் பாயை வெட்டி இழுத்து மாற்று, பாயை வெட்டியிழுத்துக் கம்பல் பாதை மாற்று, கப்பல் பாதைமாறிச் செல்.