English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gun-room
n. போர்க்கப்பலில் பீரங்கிப்படை வீரரும் அவருடைய துணைவர்களும் உணவு கொள்வதற்காகப் பயன்படுத்தும் அறை.
gun-running
n. சார்புநாட்டில் சட்டத்தை மீறி வெடிபடைக்கலங்களைக் கொண்டு செல்லுதல்.
gun-shy
a. துப்பாக்கி வேட்டுக்களினால் அச்சங்கொள்கிற.
gunboat
n. சிறு பிரங்கிப் போர்க்கப்பல்.
gunnage
n. போர்க்கப்பல் ஏற்றிச் செல்லும் பீரங்கிகளின் எண்ணிக்கை.
gunnel
-1 n. விலாங்கு போன்ற சிறு கடல் மீன் வகை.
gunner
n. துப்பாக்கி சுடுபவர், துப்பாக்கி வீரர், பீரங்கிப் படைவீரர், கப்பல் படைக்கலப் பணித்துறையின் பொறுப்பு வகிக்கிற ஆணை பெற்ற அலுவலர்.
gunnera
n. (தாவ.) நீண்டுயர்ந்த மிகப்பெரிய இலைகளையுடைய சதுப்புநிலச் செடியினம்.
gunnery
n. பீரங்கி இயக்கும் கலை, பீரங்கிஇயற்றும் கலை, பீரங்கிப் பழக்கம்.
gunny
n. (இ.) கோணிப்பை, சாக்கு.
gunpowder
n. வெடிமருந்து, துப்பாக்கி மருந்து, நுண்மணிகள் போன்ற நேர்த்தியான பச்சைத் தேயிலைத் தூள்வகை.
gunrunner
n. சார்புநாட்டில் சட்டத்தை மீறி வெடிபடைக்கலங்களைக் கொண்டு செல்பவர்.
gunshot
n. துப்பாக்கிக் குண்டு பாயுந்தூரம், (பெ.)துப்பாக்கிக் குண்டு தாக்கியதால் விளைந்த.
gunsmith
n. துப்பாக்கி செய்பவர், துப்பாக்கி செப்பனிடுபவர்.
gunstick
n. துப்பாக்கியில் மருந்து திணிக்க உதவுங் கோல்.
gunstock
n. பீரங்கிக்குழல் ஏற்றப்பெறுவதற்குரிய மரச்சட்டம்.
gunter
n. இரண்டடி நீளமுள்ள மரத்தினாலாய தட்டைஅளவு கோல் வகை. கப்பலின் உச்சிப்பாய்மரம், கப்பலின் உச்சிப்பாய்மரத்துணி.
gunwale
n. கப்பலினது அல்லது படகினது பக்கத்தின் மேல்விளிம்பு.
gunyah
n. ஆஸ்திரேலிய நாட்டுக் குடிசை.