English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gurar-boat
n. துறைமுகத்தில் காவல் வேலைக்கென விடப்பட்ட படகு.
gurgitation
n. அலையெழுச்சி, குமிழியிட்டுக் கொந்தளித்தல், குமிழியிட்டுக் கொந்தளிக்கும் ஒலி.
gurgle
n. கள கள வென்னும் நீர்பாயுமொலி, (வினை) களகள என நீர்பாயும் ஒலியெழுப்பு.
gurjun
n. குட்ட நோய் களிம்பு தைலம் தரும் கிழக்கிந்திய மர வகை.
gurnard, gurnet
கடல்மீன் வகை, பெரிய தலையும் கவசக்காப்புடைய மூன்று கை போன்ற உறுப்புக்களும் செவுள்களும் கொண்ட கடல்மீன் வகை.
gurry
n. (இ.) சிறிய கோட்டை.
guru
n. (ச.) குரு, ஞான ஆசிரியர்.
gush
n. பொங்கி வழியும் நீர்த்தாரை, உணர்ச்சியின் எழுச்சி, கிளர்ந்தெழும் கனிவு, பேச்சுநடையில் உணர்ச்சி வளம், (வினை) பொங்கிவழி, பீறிட்டு ஒழுகு, கொப்புளி, பீறிட்டு ஒழுகும் படி செய், தேனொழுகப் பேசு., இனியது கூறு. அன்பு தவம்பும் படி பேசு.
gusher
n. பொங்கிப் பீறிடும் மண்ணெண்ணெய்க் கிணறு,
gushy
a. மன உணர்ச்சி பொங்குகிற, பொங்கி வெளிப்படுகிற மன உணர்ச்சியுள்ள.
gusset
n. கொளா, அகலப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் ஆடைகளுக்கு உள்ளே கொடுக்கப்படும் முக்கோன வடிவான துணி, கட்டுமானக் கோணத்தை வலுப்படுவதற்காகக் கொடுக்கப்படும் இரும்பு வளைகொண்டி.
gust
-1 n. காற்றுவீச்சு, வன்காற்றலை, புயல்வீச்சு, மழைவீச்சலை, வெப்பலை, புகைவீச்சலை, ஒலியலை, உணர்ச்சியின் திடீர்த்தாக்குதல் இரும்பு வளைகொண்டி.
gustation
n. சுவை நுகர்தல், சுவையுணர்வு.
gustative, gustatory
சுவையுணர்வைச் சார்ந்த, சுவையாகிற.
gustful
-1 a. புயலான, கொந்தளிக்கிற, எரிச்சலுட்டுகிற, எளிதிற் கோபிக்கிற.
gusto
n. சுவைநயம், சுவை ஆர்வம்.
gusty
-2 a. சுவையான,,சுவையுடைய, நாவில் நீர் சுரக்கும் படி நறுமணமும் இன்சுவையும் ஊட்டப்பட்ட.
gut
n. உணவு செரிமான அடிக்குழாய், குடற்கூறு, குடல்நாளம், குடல் நாளங்களால் முறுக்கப்பட்ட யாழ் நரம்பு, பட்டுப்புழுக் குடலிலிருந்து இயற்றப்படும் தூண்டிலிழை, இடுங்கிய நீர் ஓடை, கால்வாய், கடற்கால், படகுப்பந்தயத்தினிடையிலுள்ள ஆற்று வளைவு, தெருவின் இடுக்குப்பகுதி, (வினை) மீனின் குடலெடு, உள்ளீட்டு, மீனைத் துப்புரவு செய், வீட்டு உள்ளீடழி, வீட்டின் உள்ளமைப்புக்களை அகற்று, ஏட்டின் கருப்பொருளை வாங்கு, சாரத்தை எடு.
gut-scraper
n. நரப்பிசைக்கருவி வாசிப்பவர், நரப்பிசைக்கருவியாளர்.