English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fruticose
a. புதர்ச்செடிபோன்ற, கனிப்பொருள்களில் புதர்ச்செடி போன்ற தோற்றமுடைய.
fry
-1 n. முட்டையிலிருந்து வெளிவந்த மீன்குஞ்சுத் திரள், இரண்டாவது ஆண்டிலுள்ள கடல்மீன் வகை, தேனீ தவளை போலப் பெருவாரியான இனப்பெருக்கமுள்ள உயிரினங்களின் குஞ்சுகள், குஞ்சுகுறுவாலிகள் தொகுதி, சிற்றின்த்திரள்.
fryer
n. மீன்பொரிக்குஞ் சட்டி, கலம், மீன்வறு கலம், மீன் வறுப்பவர்.
frying-pan
n. வாணலி, வறுத்தல் பொரித்தலுக்குரிய இருப்புச்சட்டி.
fsorecastle
n. (வர.) போர்க் கப்பலில் முன்புறமுள்ள சிறு உயர்மேடை, வாணிகக்கப்பல்களில் தளத்திற்குக்கீழே கப்பலோட்டிகள் தங்கும் முன்பகுதியிடம்.
fubsy
a. தடித்த, பருமனான.
fuchsia
n. நீண்டு தொங்கும் மலர்கள் கொண்ட புதர்ச்செடி வகை.
fuchsine
n. ஆழ்ந்த சிவப்புச்சாயமாகும் உப்பு வகை.
fucoid
a. கடற்பாசி வகை சார்ந்த, கடற்பாசி போன்ற, (மண்.) பாறைகள் வகையில் கடற்பாசித்தடம் உடைய.
fuddle
n. குடிமயக்கம், போதை, குழப்பம், (வினை) அடிக்கடி குடி, வெறிக்கச்செய், குழப்பு, உணர்வு மழுங்கச்செய்.
fuddler
n. மிடாக்குடியன்.
fudge
-1 n. பொருளற்ற செய்தி, மடத்தனம், பத்திரிகையில் கடைசிநேரம் புகுத்தப்பட்ட செய்தி, கடைசி நேரம் புகுத்துவதற்காக விடப்பட்ட இடம், பால் சர்க்கரை கலந்த மென்மை யான இனிப்புத் திண்பண்ட வகை.
Fuehrer
n. (செர்.) தலைவர், முதல்வர்.
fuel
n. விறகு, எரிபொருள், உணர்ச்சிக்கு ஈடுசெலுத்தும் பொருள், உணர்ச்சியைப் பெருக்கும் பொருள், (வினை) தீக்கு எரிபொருள் இடு, எரிபொருள் பெறு.
fug
n. புழுக்கம், மூலைமுடுக்கில் பொதிந்துள்ள தூசி, (வினை) புழுக்கமான சூழ்நிலையை இனிதாக நுகர்.
fugacious
a. நிலையற்ற, விரைந்தேடுகிற, எளிதில் மறைகிற, கைக்கொள்ளுதற்கரிய, எளிதில் கிடைத்தற்கு இயலாத.
fugal
a. பலவோசை உருப்படி சார்ந்த.
fugitive
n. நாடு கடத்தப்பட்டவர், நாடோடி, அகதி, நாடு விட்டு நாட்டில் அடைக்கலம் புகுபவர், தப்பியோடியவர், ஆள்வோர் காப்பிலிருந்தே தண்டனையிருந்தோ பகைமையிருந்தோ இடரிலிருந்தோ தப்பி ஒளிந்தோடித் திரிபவர், (பெ.) தப்பி ஓடுகிற, பிழைத்தோடி வந்த, ஒடிவிட்ட, கணந்தோறும் மாறுகிற, நிலையற்ற, கணநின்று மறைகிற, வரைந்து பட்டுப்போகிற, இலக்கியவகையில் நிலையுடைப்பயனற்ற, கணநிலைச்சுவையுடைய.
fugle
v. படைத்துறைப்பயிற்சி முன்மாதிரி இயக்குநராகச் செயலாற்று.